MBBS: வைத்தியராக ஆசை இருக்கா? குறைந்த செலவில் MBBS படிக்கக்கூடிய நாடுகள்
பொதுவாக அனேகமானோருக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவு பலருக்கு இருக்கும். இந்த படிப்பிற்கு நிறைய பணம் தேவபை்படுவதால் பலரின் கனவுகள் நிறைவேறாமல் போகின்றது.
சிலர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்று நினைப்பது தற்போது கனவாகவே உள்ளது. இந்தியாவில் குறைவான எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக அரசு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைப்பது கடினம்.
இதனால் மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகளின் கட்டணம் அதிகமாக இருப்பதால் பலர் சேர்க்கை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் குறைந்த செலவில் எம்.பி.பி.எஸ் படிக்கக்கூடிய சில நாடுகள் உள்ளன. அது எந்தெந்த நாடுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெர்மனி
சொந்த நாட்டில் இருந்து மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் புள்ளி விவரத்தை அடிப்படையில் பெரும்பாலான மாணவர்கள் ஜெர்மனி செல்கின்றனர். அங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்கலாம்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண் அடிப்படையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த கொள்ள முடியும். அங்கு ஆண்டுக்கு ரூ.4 முதல் 6 லட்சம் வரை மட்டுமே மருத்துவம் படிக்க செலவாகிறது.
இங்கு மருத்துவம் படிக்க ஏற்ற பல்கலைக்கழகம்(Heidelberg University) மற்றும் ஹாம்பர்க்(Hamburg University) பல்கலைக்கழகங்களாகும்.இங்கு குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம்.
ரஷ்யா
ஆண்டுதோறும் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க ரஷ்யா செல்கின்றனர். இங்கும் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியம். இங்குள்ள அறிக்கைகளின்படி, குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவம் படிக்க மாணவர்களின் விருப்பமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். ரஷ்யாவில் மருத்துவம் படிக்க ரூ.29 முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகும்.
பிலிப்பைன்
பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்புகள் குறைவான செலவில் படிக்கலாம். மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் படிக்க அங்கு செல்கின்றனர். பிலிப்பைன்ஸில் 5.5 முதல் 6.5 ஆண்டுகளில் மருத்துவ படிப்பு முடிக்கப்படுகிறது.
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு (FMGE) மூலம் இங்கே மருத்துவ கல்லுரிகளில் சேர்க்கப்படும்.பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பதாரர் வயது குறைந்தபட்சம் 17 மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் இருக்க வேண்டும். இங்கு எம்.பி.பி.எஸ் படிக்க ரூ.20 முதல் ரூ.22 லட்சம் வரை செலவாகும் எனப்படுகின்றது.
சீனா
சீனாவில் எம்பிபிஎஸ் படிப்பு மொத்தம் 6 ஆண்டுகள். இங்கு 5 ஆண்டு படிப்பு மற்றும் ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப். தற்போது மாணவர்கள் அதிகளவில் சீனாவுக்குப் படிக்கச் செல்கின்றனர்.
இதற்கு முக்கியக் காரணம், சீனா வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இங்கு மருத்துவம் படிப்பதற்கான குறைந்தபட்ச வயது 17 மேல் இருப்பது அவசியம். சீனாவில் எம்பிபிஎஸ் படிப்பதற்கு ரூ.29 முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |