இந்திய மக்களை தாக்கும் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு- அறிகுறிகள் என்ன?
இந்தியா - கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக கண்டயறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கிளேட் 1பியின் முதல் பாதிப்பாகும். இந்த நோய் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குரங்கம்மை விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் மலப்புரத்திற்கு வந்திருந்தார் என்றும் அவருக்கு தான் இந்த தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் குரங்கம்மை நோய் பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குரங்கம்மை நோய்
இந்த நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸால் ஏற்படுகின்றது. Mpox தொடுதலின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவு வாய்ப்பு கொண்டது.
இந்த நோய் கடந்த 1957 ஆம் ஆண்டு காங்கோவில் உள்ள ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக மலப்புராவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு அடுத்து கண்டயறியப்பட்டுள்ளது.
நோயாளியின் உடல் திரவங்கள் மற்றும் நோயாளி பயன்படுத்தும் பொருட்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் என சொல்லப்படுகின்றது. “ உலக சுகாதார நிறுவனம்” 2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக குரங்கம்மை வைரஸ் இருப்பதை அறிந்து சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.
இதனை தொடர்ந்து குரங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் இந்தியாவில் மாத்திரம் 30 பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நோய் தற்போது கொஞ்சம் மாறுப்பட்டு 'கிளாட் 1பி ஸ்ட்ரெய்ன்' என்றழைக்கப்படுகின்றது.
குரங்கம்மையின் அறிகுறிகள்
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர் நபர் ஒருவருக்கு அதிகப்படியான சோம்பல், மூட்டு வலி, படை நோய் மற்றும் கொப்புளம் போன்ற சொறி காணப்படும்.
இதன் போன்ற அறிகுறிகள் நோயாளியின் முகம், கைகள், கால்கள் மற்றும் முழு உடலிலும் காணப்படும். அத்துடன் தோல் வெடிப்பு, அரிப்பு பிரச்சினைகளும் இருக்கும்.
தடுப்பதற்கான வழிகள்
1. குரங்கம்மை வைரஸ் விலங்குகள் மூலம் வேகமாகப் பரவக் கூடியது. இதனால் விலங்குகளின் தொடர்பை கட்டுபாட்டில் வைக்கவும்.
2. நோயால் பாதிக்கப்பட்ட நபர் பக்கத்தில் செல்வதை தவிர்க்கவும்.
3. நோயாளி பயன்படுத்திய பாத்திரங்கள், உடைகள், படுக்கை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது.
4. குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் பக்கத்தில் இருந்தால் உங்களின் கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் போட்டு கழுவ வேண்டும்.
5. முகத்திற்கு கவசம் அணியாமல் வெளியில் செல்லக் கூடாது.
6. தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் குரங்கம்மை நோயிலிருந்து வெளியில் வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |