GPay, PhonePe-யில் பணம் அனுப்பினால் கட்டணம்... எந்தெந்த வங்கிக்கு தெரியுமா?
UPI மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்க ஐசிஐசிஐ வங்கி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்
ஐசிஐசிஐ வங்கி இந்த புதிய விதியினை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரும் என்றும் முன்னதாக யெஸ் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் இதனை செய்துள்ளதாம்.
ஒரு PA ஐசிஐசிஐ வங்கியில் எஸ்க்ரோ கணக்கைப் பராமரித்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 அடிப்படை புள்ளிகள் (0.02%) கட்டணம் வசூலிக்கப்படும். இதன் அதிகபட்ச வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.6 ஆக இருக்கும்.
ICICI இல் எஸ்க்ரோ கணக்கு இல்லாத PA களுக்கு 4 அடிப்படை புள்ளிகள் (0.04%) வசூலிக்கப்படும். இதில், அதிகபட்ச கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது?
பரிவர்த்தனை வணிகரின் ICICI வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டால், எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
யெஸ் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற பிற வங்கிகள் கடந்த 8-10 மாதங்களாக UPI பரிவர்த்தனைகளுக்கு PA களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ICICI-யின் புதிய கட்டணத்தின் தாக்கம் எதிர்காலத்தில் வணிகர்களை அடையக்கூடும்.
UPI வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இருக்கலாம், ஆனால் வங்கிகள் இப்போது கட்டண திரட்டிகளிடமிருந்து கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் தங்கள் செலவுகளை மீட்டெடுப்பதை நோக்கி நகர்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |