உலகிலேயே இந்த விலங்கின் பால் தான் மிகவும் சுவையானதாம்! எதுன்னு தெரியுமா?
பொதுவாகவே உலகளாவிய ரீதியில் பெரும்பாலான மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் உணவுகளின் பட்டியலில் பாலும் பால் பொருட்களும் முக்கிய இடம் வகிக்கின்றது.
உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க தினமும் பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.

கல்சியத்தின் சிறந்த மூலமாக திகழும் பால் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு இன்றியமையாதது. நாம் அன்றாட வாழ்வில் பால் மற்றும் ஏராளமான பால் பொருட்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்துகின்றோம்.
ஆனால் எந்த விலங்கின் பால் மிகவும் சுவையானது என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு வந்துள்ளதா? அதற்கான விடையை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

அதிக சுவையான பால்
மனிதர்கள் பசும் பால், எறுமை பால், ஆட்டு பால், ஒட்டகப்பால் என சில வகை பால்களை மட்டுமே குடிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள். எனவே இந்த விலங்குகளின் பால் சுவை பற்றி மட்டுமே மக்களுக்கு தெரிந்திருக்கும்.

உலகில் மிகவும் சுவையான பால் தரும் அந்த விலங்கு எது என கேட்டால், நம் அனைவராலும் அறியப்படும் மற்றும் நேசிக்கப்படும் யானையின் பால் தானாம்.
ஆய்வுகளின் அடிப்படையில், யானைப் பால் தான் உலகிலேயே மிகவும் சுவையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாடுகளின் பட்டியலில் எந்த இனத்தை சேர்ந்த மாடுகளின் பால் மிகவும் சுவையாக இருக்கும் என்றால், சாஹிவால் (Sahiwal cow) பசுவின் பால் மிகவும் சுவையானது என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இன மாடுகள் பொதுவாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |