முட்டை மற்றும் பால் இரண்டையும் தரும் விலங்கு இருக்கின்றதா? இந்த விலங்கு தான்!
பொதுவாகவே உலகில் அனைத்து விலங்குகளும் குட்டி ஈன்னு பால் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முட்டை இட்டு இனத்தை பெருக்கும் ஒரு உயிரினம் தன் குட்டிக்கு பாலும் கொடுக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களின் ஒவ்வொரு பண்புகளும் நமக்கு வியப்பூட்டுவதாகவே இருக்கின்றது.
அந்த வகையில் முட்டை மற்றும் பால் இரண்டையும் கொடுக்கக்கூடிய ஒர் அரியவகை உயிரினம் குறித்த முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிளாட்டிபஸ்
பால் மட்டும் முட்டை இரண்டையும் கொடுக்கும் அந்த அரிய வகை உயிரினம் பிளாட்டிபஸ் தான். இந்த உயிரினம் பெரும்பாலும் ஆஸ்திரேலியா பகுதிகளில் செரிந்து வாழ்கின்து.
பிளாட்டிபஸ் என குறிப்பிடப்படும் இந்த உயிரினம் முட்டையும் இட்டு குஞ்சும் பொரித்து பால் கொடுக்கும் ஒரு விசித்திரமான உயிரினமாக காணப்படுகின்றது.
இது வாத்தின் தோற்றத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டிக்கின்றது. இதன் கால்விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் தட்டையான வாலும், உடல் ரோமத்தாலும் சூழ்ந்த விலங்குகளின் அமைப்பும் இதற்கு காணப்படுகின்றது. ஆனால் பாலூட்டிகளைப் போல அவைகளுக்கு பற்கள் இருப்பது கிடையாது.
அதுமட்டுமில்லாமல் இது பாம்பினை போன்று விஷத்தன்மையும் கொண்டிப்பாகவும் தெரியவருகின்றது. குறித்த பிளாட்டிபஸ் உயிரினம் நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது.
இது எலிகளை போலவே நிலத்தில் வலை பறித்து வாழும். மீன்களை போல நீருக்கும் மூழ்கி உணவும் தேடும்.பிளாட்டிபஸ் ஏறதாழ 12 ஆண்டுகள் வலையில் உயிர்வாழும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |