யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க
யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாகும் ஒரு வகையான இரசாயனமாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை மருத்துவ மொழியில் ‘ஹைப்பர்யூரிசிமியா’ எனக் குறிப்பிடுவார்கள்.
யூரிக் அமிலம் பியூரின் எனப்படும் புரதத்திலிருந்து உடலில் உருவாகின்றது. அவை உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.
ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும். பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.
உதாரணமாக கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு யூரிக் அமிலம் அதிகரிப்பது காரணமாக அமைகின்றது.இதனை இயற்கையாகவே கட்டுப்பத்தும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரட்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.
கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் யூரிக் அமில பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். கேரட் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலத்தை உருவாக்கும் என்சைம் விரைவில் குறைவடையும்.
பாகற்காய்
பாகற்காய் இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் பல்வேறு மருத்துவ பலன்கள் நிறைந்து காணப்படுகின்றது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. யூரிக் அமில பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் பாகற்காயை சேர்த்துக்கொள்வது விரைவில் தீர்வு கொடுக்கும்.
வெந்தய கீரை
வெந்தய கீரையை விரிவான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை என்று சொல்லலாம். இவை நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.
மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. இந்த கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது யூரிக் அமில படிகங்களை பலவீனமாக்குவதுடன் அதனை எளிமையாக உடலில் இருந்து வெளியேற்ற துணைப்புரிகின்றது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் யூரிக் அமிலத்தை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இந்த காய்கறி கீல்வாதத்தின் அறிகுறிகளையும் குறைக்கிறது.
பேரிக்காய்
பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றலை கொண்டுள்ளது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தெரிவாகும்.
சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. இதில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் யூரிக் அமிலத்தின் அளவை விரைவில் குறைக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |