தேவதை போன்ற மனைவியை அடையும் அதிர்ஷ்டம் கொண்ட ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் சிறப்பு குணங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு தங்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மிகவும் அழகிய தோற்றமுடைய பெண் மனைவியாக கிடைப்பாராம்.
அப்படி பிறப்பிலேயே தேவதை போன்ற மனைவியை அடையும் அதிர்ஷ்டம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே காதல் மற்றும் திருமண வாழ்க்கையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் மற்றவர்களை ஈர்க்கும் வசீகர தோற்றம் கொண்டவர்களாகவும், பெண்களை திரம்பி பார்க்க வைக்கும் காந்த ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வலுவான மற்றும் நம்பகமான இயல்புக்கு பெயர் பெற்ற ரிஷப ராசி ஆண்கள், அழகியல் உட்பட வாழ்க்கையின் வசீகரமான விஷயங்கள் மீது தீவிர ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
இவர்களின் இந்த குணங்கள் மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய காரணமாக இவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் அளவுக்கு அழகிய மனைவி கிடைப்பார்கள்.
துலாம்
துலாம் ராசி ஆண்கள் இயல்பாகவே உறவுகள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால, அழகு மீது இவர்களுக்கு இயற்கையாகவே ஈர்ப்பு அதிகமாக இருக்கும்.
அவர்களின் நேர்த்தியான ரசனை மற்றும் அழகியலைப் பாராட்டும் திறன், என்பவற்றுடன் இவர்களின் அதிர்ஷ்டமும் இணைவதால், இவர்களுக்கு தேவதை போல் வசீகர தோற்றம் கொண்ட பெண் மனைவியாக கிடைப்பாள்.
சிம்மம்
கிரகங்களின் அரசனாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த நெருப்பு ராசியான சிம்ம ராசிக்காரர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களை வசீகரிக்கும் ஒரு ரகசிய ஒளியை இயல்பாகவே வெளிப்படுத்துகிறார்கள்.இது இவர்களை நோக்கி வசீகர அழகுடையவர்களை ஈர்க்கின்றது.
அவர்களின் காந்த ஆளுமை மற்றும் கம்பீரமான தோற்றம் காரணமான பிரபஞ்ச அழகிகள் இவர்கள் மேல் மோகம் கொள்வார்கள்.அதன் விளைவாக இவர்களுக்கு நிச்சயம் ஒரு பேரழகி தான் மனைவியாக அமைவாள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |