விமானிகளுக்கு இவ்வளவு சலுகைகளா! பைலட் பெறும் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அண்மையில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகிய சம்பவம் உலக மக்களயே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
இதன் பின்னர் விமானம் தொடர்பாகவும், பைலட் பதவி தொடர்பாகவும் இணையத்தில் அதிகளவாக விடயங்கள் தேடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் விமானிகள் குறித்த சில சுவாரஸ்யமாக விடயங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
விமானியாவது எப்படி?
விமானியாக மாறுவதற்கு கல்வித் தகுதியுடன், ஏராளமான கடின பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பைலட் என்பதற்கு அர்த்தம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவர் என்பதாகும். விமானத்திலும் கட்டுப்பாட்டுத் தளத்தின் உத்தரவுகளை இவர்கள் பின்பற்ற வேண்டும்.
இதனால் தான் விமானம் மற்றும் ரயிலை இயக்குபவர்களை பைலட் என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்கின்றோம்.
ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானத்தை போன்ற விமானங்களை இயக்கும் ஒரு விமானிக்கு மாதம் 8 முதல் 10 லட்ச ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படும் என தகவல்கள் குறிப்பிடுகின்றது.
இருப்பினும், பைலட்டின் அனுபவம், அவர் பயணம் செய்த நேரங்களின் எண்ணிக்கை, விமான நிறுவனம் உள்ளிட்டவற்றைக் குறித்து சம்பளத்தில் சிறியளவில் மாற்றங்கள் இருக்கலாம்.
குறிப்பாக மூத்த விமானிகள் அதிகபட்சம் மாதம் 10 லட்ச ரூபாய் வரை பெறுகிறார்கள். இதனைத் தவிர்த்து பல்வேறு சலுகைகளையும் விமானிகளுக்கு பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் பயணம் செய்தல், கூடுதல் நேரம் விமானத்தை இயக்குதல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு இன்னும் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
பொதுவாக விமானிகளுக்கு வெளிநாட்டில் தங்கி இருக்கக்கூடிய வாய்ப்பு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது.விடுமுறை நாட்களில் பணியாற்றினால் அதற்கும் தனி தொகை சம்பளத்தில் அதிகரிக்கும்.
விமானிகளாக ஆவதற்கு, ஒரு குறிப்பிட்ட பயிற்சி மற்றும் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாட்டு அரசும் இந்தத் தேவைகளை வெவ்வேறு விதமாக வரையறுத்துள்ளன. பயிற்சி முடிந்ததும், விமானிகளின் திறனைப் பொருத்து சான்றிதழ் வழங்கப்படும்.
விமானிகள் இரண்டு வகையான உரிமங்களைப் பெறலாம்: தனி உரிமம் மற்றும் வணிக உரிமம். தனி உரிமம் பெற்றவர்கள் தனி விமானங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள், வணிக உரிமம் பெற்றவர்கள் பலர் பயணிக்கக்கூடிய விமானங்களை ஓட்ட முடியும்.
விமானிகள் விமானத்தை இயக்கும்போது, நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவசரகால சூழ்நிலைகளில், விமானத்தை எவ்வாறு பாதுகாப்பாக தரையிறக்குவது என்பது குறித்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |