முகேஷ் அம்பானி தன் மகனை வீட்டு காவலாளியிடம் மன்னிப்பு கேட்க வைத்தாரா? எதற்காக தெரியுமா?
தனது மகனை வீட்டு காவலாளியிடம் முக்கேஷ் அம்பானி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் குறித்து நீதா அம்பானி பகிர்ந்துக்கொண்ட விடயம் தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகின்றது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்துமதிப்பு 2025 ஆம் ஆண்டில் சுமார் ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதன் வர்த்தகம் கச்சா எண்ணெய் முதல் சில்லறை வர்த்தகம் வரை பரந்து விரிந்து காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு சொத்துக்களுக்கு அதிபதியாகவும் சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்துடன் இருக்கும் முகேஷ் அம்பானி குழந்தைகளை வளர்ப்பதிலும் மிகவும் அக்கறையான மற்றும் கண்டிப்பான தந்தை என்பதை நீதா அம்பானி சிமி கரேவாலின் நிகழ்ச்சியில் பெற்றோர் பாணிகளைப் பற்றி விவாதிக்கும் போது பகிர்ந்துள்ளார்.
முக்கேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியிளருக்கு ஈஷா என்ற மகளும், ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இரு மகன்களும் இருக்கின்றார்கள்.

வாட்ச்மேனிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்
முகேஷ் அம்பானி ஒருமுறை ஆகாஷை வீட்டு காவளாளியிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னாராம். அதாவது , ஒருமுறை அவர்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, வீட்டு காவலாளியிடம் தொலைபேசியில் மிக கடுமையான தொனியில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த அம்பானி ஆகாஷின் தொனி மிகவும் முரட்டுத்தனமாக இருந்தமையை கண்டித்ததுடன், கீழே சென்று காவலாளியிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினாராம்.

முகேஷின் பெற்றோர் பாணி இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பானது என்று நிதா விளக்கினார். சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அவர் தனது குழந்தைகளுக்கு தெளிவாகக் கற்றுக் கொடுத்துள்ளார்.
அம்பானி குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதை தனது குழந்தைகள் ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள் என்று நீதா அம்பானி பகிர்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |