குளிர்கால நோய்களுக்கு மருந்தாகும் 5 கிட்சன் பொருள்கள்.. பலன்களுடன் கூடிய விளக்கம்
பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் சுவாச நோய்கள் வருவது வழமை.
அதிலும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு கட்டாயம் மூக்கடைப்பு, சளி தொல்லை அதிகமாகவே இருக்கும்.
குளிர்காலம் வந்தாலே மருந்து வில்லைகள் நிறைந்திருக்கும். ஏனெனின் எப்போதும் யாருக்கு என்ன நோய் வரும் என்று தெரியாமல் இருக்கும்.
மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு அடிக்கடி மருந்து வில்லைகள் எடுத்து கொள்வதை தவிர்த்து வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்தி குணமாக்க முயற்சிக்கலாம்.
சமயலறையில் இருக்கும் சில முக்கிய மூலிகை பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் முறைப்படி மருத்துவம் செய்யலாம்.
அந்த வகையில் குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வாகும் வீட்டு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுவாச பிரச்சினை
1. ஆப்பிள் சிடார் வினிகர் மூக்கடைப்பு, சைனஸ் மற்றும் சளி பிரச்சினைகளுக்கு தீர்வாகின்றது. இப்படியான நேரங்களில் இரண்டு ஸ்பூன் அளவு ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர வேண்டும்.
2. புதினாவில் மெந்தால் உள்ளது. இது நுரையீரலில் இருக்கும் சளியை கரைக்க உதவுகின்றது. அத்துடன் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சைனஸ் அறிகுறிகளைக் குறைக்கின்றது.
3. தேன் பருவ கால சளி, இருமல், நுரையீரல் தொடர்பான சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கின்றது. இரண்டு ஸ்பூன் தேனை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
4. மிளகை சேர்த்து காரமாக சாப்பிடும் பொழுது சளி, இருமல் பிரச்சினைகள் குணமாகின்றது. அத்துடன் நுரையீரல் மற்றும் மூக்கில் சளியைத் தேங்கவிடாமல் வெளியேற்றவும் உதவுகின்றது.
5. இஞ்சி கலந்து டீ அல்லது உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் சளி, இருமல் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |