அடடா.... மொரு மொருன்னு கோதுமை ரவா வடை - சுவையா செய்வது எப்படி?
இந்தியாவில் பிரபலமான உணவுகளில் ஒன்று கோதுமை ரவா உப்புமா. இந்த ரவா உப்புமா சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.
மேலும், உடல் எடை குறைய இந்த கோதுமை ரவா உப்புமா ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். இந்த கோதுமை ரவா உப்புமா கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் காலை வேளையில் சீக்கிரமாகவே இந்த கோதுமை ரவா உப்புமாவை செய்து விடலாம். நாம் கடலைப்பருப்பு வடை, உளுத்தம்பருப்பு வடை செய்து சாப்பிட்டிருக்கிறோம்.
ஆனால், கோதுமை ரவை வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ஈஸியா எப்படி சுவையான கோதுமை ரவா வடை செய்வது என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 4 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கெட்டித் தயிர் - 3 கப்
மல்லித்தழை நறுக்கியது - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
இஞ்சித் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை போட்டு கருகாமல் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், தயிரில் வறுத்தெடுத்த கோதுமை ரவை போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர், பச்சைமிளகாய், இஞ்சித் துவையல், மல்லித்தழையை சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைய வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் கோதுமை ரவை வடையை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். சுவையான கோதுமை ரவை வடை ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |