whatsapp கொண்டுவந்த அதிரடி அப்டேட்! இனி நமக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம்
whatsapp அதிரடியாக மெசேஜ் யுவர்செல்ப் ( Message Yourself) என அழைக்கப்படும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் பொருந்தும்.
இந்த அப்டேட்டை பயன்படுத்தி யூசர்கள் தங்களுக்கென சில குறிப்புகளை எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக whatsapp இல் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியானது அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சிலருக்கு உடனடியாகவும் சிலருக்கு சில வாரங்களிலும் வேலை செய்யும் எனவும் குறிப்பிடப்பிட்டுள்ளது.
புதிய மெசேஜ் Message Yourself அம்சத்தை இயக்குவது எப்படி?
- whatsapp-ஐ திறக்கவும்
- புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்
- உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தமும் திரையில் தோன்றும் அந்த லிஸ்டில் உங்களுடைய மொபைல் நம்பரும் மெசேஜ் செய்வதற்கு உண்டான லிஸ்டில் தோன்றும்.
- உங்களுடைய மொபைல் எண்ணை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான செய்திகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
- இதனை ஒரு குறிப்புகள் போலவும் அல்லது டைரியை போலவும் நம்மால் பயன்படுத்த முடியும்.
whatsapp இந்த வசதியை கொண்டுவந்திருப்பது பலருக்கு வேடிக்கையாக இருக்கலாம். உண்மையில் இதனால் பல பயன்கள் உண்டு.
நாம் விரும்பிய அவ்வப்போது தேவைப்படும் வலைத்தளங்களை குறித்து வைத்துக் கொள்ள முடியும்.
சில முக்கிய செய்தி குறிப்புகளை சேகரித்துக் கொள்ளலாம்.
நாம் மறந்துவிடக் கூடிய பல்வேறு விஷயங்களையும் நமக்கு நாமே செய்தியாக அனுப்பி பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும்.
இதனால் நோட்ஸ் எடுப்பதற்கு என்று தனியாக எந்த ஒரு செயலியையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய தேவை இல்லை. எனவே வாட்ஸ்அப் யூசர்கள் இனி மெசேஜ் யுவர்செல்ப் அம்சத்தினை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.