உங்கள் வாட்ஸ் அப்பிற்கு ஆபத்து: கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
வாட்சப்பில் வரும் லிங்க்கள் தொடர்பில் ஒரு தகவலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வாட்ஸ் அப்
பொதுவாக தற்போது அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு செயலி வாட்சப் தான். இந்த செயலியை உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.
மேலும் இதில் என்ன ஸ்பெஷல் என்றால் மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு தேவையான வசதிகளை உடனுகுடன் அப்டேட் செய்கின்றது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக முடக்கப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இதுவரையில் வாட்சப்பில் இது போன்ற பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கின்றது. அந்த வகையில் மெட்டா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாத்திரம் புது விதமான சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளது.
அதில், ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் வாட்சப்பை முடக்குவதற்காக வாட்சப்பில் ஒரு புதிய பக் பகிரப்பட்டு வருகின்றது.
இது குறிப்பிட்ட நபர்களின் சாட்டிலோ அல்லது குழுவிலோ பகிரப்படுகின்றது. அந்த லிங்கை நாம் தொடும் போது உடனடியாக நமது செல்போனில் வாட்ஸ் அப் செயலி முடங்கி விடும்.
இதனை தொடர்ந்து பொதுவாக நாம் பார்க்கும் லிங்க்கள் Wa.me/settings என்ற உள்ளீடுகளோடு வரும் இது செட்டிங்கில் ஒரு பக்கத்தை திறக்கும்.
மாறாக தற்போது வரும் லிங்க் நம்முடைய வாட்சப்பை முடக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் 2.23.10.77 என்ற ஆண்ட்ராய்டு வெர்சன் கொண்ட செல்போன்கள் இலகுவாக முடங்கி விடும்.
லிங்கை Open செய்து விட்டால் என்ன செய்யலாம்?
உங்கள் போன்களில் இருக்கும் வாட்சப் ஹேக் செய்து விட்டால் உடனடியாக உங்கள் பக்கத்தில் இருக்கும் லேப்டாப்பிலோ, கம்ப்யூட்டரிலோ வாட்சப் வெப் ஐ பயன்படுத்தி திறந்து கொள்ளுங்கள்.
திறந்த பின்னர் அந்த ஹேக்கிங் லிக்கை சாட்டிலிருந்து உடனடியாக டெலிட் செய்து விடுங்கள்.