வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து வெளியேறினால் தெரியாது! விரைவில் வரப்போகும் அசத்தலான அப்டேட்
உலகில் வாட்ஸ் அப் செயலியை 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் எழுந்தவுடன் இருந்து இரவு தூங்கும் வரை வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாத நபர்களே இல்லை.
அந்த அளவிற்கு வாட்ஸ் அப் அரட்டை செயலி பிரபலமான ஒன்று. அடிக்கடி இந்நிறுவனம் ஏதாவது ஒரு அப்டேட்டை வழங்கி வரும்.

அந்த வகையில், வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும், ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி.
ஒரு முறை மட்டும் காணும்' மெஸேஜ்களை Screenshot எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு உள்பட பல புதிய அம்சம்கள் வாட்சப்பில் வர உள்ளதாக மார்க் வெளியிட்டுள்ளார்.
தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுவரும் வாட்ஸ் ஆப் நிறுவனம்.,
இந்த புதிய அப்டேட்டையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.


 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        