Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ 2025 இல் ஜாக்பாட் உறுதி
எண் கணணித சாஸ்திரம் தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும்.
அதே போன்று எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என இந்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான எண்கணித சாஸ்திரதின் கணிப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்வில் பெரியளவில் நல்ல மாற்றங்கள் நிகழவுள்ளது.
அப்படி 2025 ஆம் ஆண்டில் எந்தெந்த எண்களில் பிறந்தவர்கள் அனைத்து செல்வ செழிப்பையும் பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
எண் 4
எந்த மாதமாக இருந்தாலும் 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் 2025 ஆண்டு பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்கள் நிகழப்போகின்றது.
பொதுவாக பிறப்ப எண் 4 ஆக இருப்பவர்களின் அதிபதி ராகுவாகும் என்பதால், இவர்கள் கடந்த காலங்களில் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்திருக்கும்.
ஆனால் 2025 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடயேயே தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான விடயங்கள் நிகழ ஆரம்பிக்கும். எதிர்பாத பணபரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு காணபட்படுகின்றது.
எண் 6
ஒரு மாதத்தின் 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. 2025 ஆம் ஆண்டில் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பணத்துக்கு குறைவே இருக்காது.
சிறப்பாக நிதி நிலை காரணமாக குடும்பத்துடன் அதிக நேரத்தை கழித்து மகிழ்ச்சியடையும் வாய்ப்புகள் அமையும்.
புதிய வீடு மற்றும் நிலம் அல்லது வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் கூடி வரும். திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான திருப்பங்கள் ஏற்படும்.
எண் 8
எந்த மாதத்திலும் 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், சனியின் ஆதரவால் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியில் பல வெற்றிகளை குவிக்கும் சிறந்த ஆண்டாக இருக்கும்.
எந்த முயற்சியிலும் சற்று அதிகமான உழைப்பை வழங்கவேண்டியிருக்கும். ஆனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நிதி விடத்தில் சாதமான தன்மை நிலவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |