WhatsAppல் அறிமுகமாகிய புதிய அம்சம்: மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்
வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு நாம் சேட் செய்யும் போது சாட் தீம்கள் மற்றும் பேக் கிரவுண்ட் இவற்றினை மாற்றும் அம்சத்தை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அப்டேட்
WhatsApp-இல் மெட்டா அரட்டை தீம்கள் மற்றும் அரட்டை பின்னணிகளுக்கான வால்பேப்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
விரைவில் உலகளாவிய அனைத்து WhatsApp பயனர்களுக்கும் இந்த சிறப்பம்சம் கிடைக்கும். கேமரா ரோலில் இருந்து ஒரு பின்னணியைத் தேர்ந்தெடுத்துச் சேர்க்கலாம்.
வண்ணமயமான வண்ண வடிவத்தில் ஒவ்வொரு அரட்டையிலும் இதுபோன்ற வால்பேப்பர்களை வழங்க முடியும். இது WhatsApp அரட்டை இடைமுகத்தை மேலும் தனிப்பயனாக்கும்.
WhatsApp வழங்கும் முன்னமைக்கப்பட்ட வண்ண தீம்களுக்கு மேலதிகமாக, பயனர்களின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட வண்ண தீம்களை வழங்கவும் முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |