போன் பேட்டரியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டுமா? இந்த தவறை செய்யாதீங்க
ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆயுள் காலம் நீடிப்பதற்கு நாம் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்போன்
இன்றைய காலத்தில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஸ்மார்ட்போனும் ஒன்றாகியுள்ளது.
போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை மொபைல் போன் பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுப்பது என்றால் பேட்டரி தான். பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரமாக காலியாவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
அதிலும் முக்கியமான தருணத்தில் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் செல்வது வேலைகளையும் தாமதப்படுத்துகின்றது.
போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த தவறை செய்யாதீங்க
தூங்கும் முன்பு இரவு முழுவதும் மொபைல் போனை சார்ஜ் போட்டு தூங்குவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், பேட்டரியின் திறனையும் பாதிக்கும்.
நீங்கள் எப்பொழுது சார்ஜ் போட்டாலும் பேட்டரி 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மட்டுமே சார்ச் செய்ய வேண்டும். நீங்கள் 100 சதவீதம் சார்ஜ் செய்தால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு பேட்டரியின் திறனும் பாதிக்கும்.
திரையில் எப்பொழுதும் அதிகமான பிரகாசத்தை வைப்பது கூடாது. இவையும் பேட்டரியினை காலி செய்வதுடன், கண்தொடர்பான பிரச்சனையும் ஏற்படுத்தும். தேவைக்கு ஏற்ப திரையின் பிரகாசம் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்து வைக்கவும்.
நாம் பயன்படுத்தும் செயலில் பின்னணியில் செயல்படாமல் அவ்வப்போது நிறுத்த வேண்டும். இந்த செயலிகள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், பின்னணியில் இயங்குவது பேட்டரி உபயோகத்தை அதிகரிக்கிறது.
தேவையற்ற நோட்டிஃபிகேஷன்கள் ஆக்டிவேட் செய்யக்கூடாது. இதனால் கூட பேட்டரியின் பயன்பாடு அதிகரிக்கும்.
இதே போன்று புளூடூத் மற்றும் வைஃபை பயன்படுத்தாதபோது, அவற்றை அணைத்து வைக்க வெண்டும். இதவும் பேட்டரி பயன்பாட்டை கணிசமாக அதிகரித்து சீக்கிரம் பேட்டரி காலியாகிவிடுமாம்.
ஸ்மார்ட்போனை நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் சூடான இடத்தில் வைப்பதால் பேட்டரி சேதமடைந்துவிடும்.
ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு போனின் சார்ஜரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்தால் பேட்டரி சேதப்படுத்துவதுடன், அதன் திறனையும் பாதிக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |