18 லட்சம் கணக்குகளை நீக்கிய வாட்ஸ் அப் நிறுவனம் - பயனாளர்களே உஷார்
வாட்ஸ் அப் செயலியை உலகமெங்கும் சுமார் 2 கோடிக்கு அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சமீப நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு மாறாகப் பயன்படுத்தப்பட்ட கணக்குகளை நிறுவனம் முடக்கியுள்ளது.
அதில் இந்தியாவில் மட்டுமே 18 லட்சத்துக்கும் அதிகமான பயனர் கணக்குகளை நிறுவனம் முடக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பயனர் தரப்பிலிருந்து தெரிவிக்கும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் வாட்ஸ்அப் பரிசீலனை செய்து, தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாட்ஸ் அப் மூலம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய இரு வழிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று grievance_officer_wa@support.whatsapp.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை பதிவு செய்வது.
மற்றொன்று குறைதீர்க்கும் அலுவலருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் பயனர்கள் தங்களின் குற்றச்சாட்டுகளைப் பதிவிடலாம்.