சுகர் நோயுள்ளவர்கள் கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இனி தெரிஞ்சிக்கோங்க..!
சர்க்கரை நோயுள்ளவர்கள் எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் அதிகமாக எடுத்து கொள்வார்கள்.
உடல் நலம் கருதி சர்க்கரை நோயாளர்கள் அதிகளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவார்கள்.
அதே போல் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் அவர்கள் சாப்பிடும் சாப்பாடுகளில் கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளவது அவசியம்.
இதனை தொடர்ந்து பானங்களை தவிர்த்து கசாயம் மற்றும் ஏலம் , கராம்பு கலந்த பானங்களை எடுத்து கொள்வார்கள்.
அந்தவகையில் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்ன என்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடலாமா?
1. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பிரவுன் ரைஸ் ஆகியவற்றை அன்றாடம் உணவுடன் எடுத்து கொள்ள வேண்டும்.
2. பீன்ஸ், அவரை, புரொக்கோலி (பச்சை பூக்கோஸ்), பாகற்காய் ஆகிய காய்கறிகளில் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும் சில ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. இதனால் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இது போன்ற காய்கறிகளை தினமும் எடுத்து கொள்வது சிறந்தது.
3. புரதம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் பால், முட்டையின் வெள்ளைக் கரு, கோழிக்கறி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
4. ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா ஆகிய பழங்களில் கிளைசிமிக் இன்டக்ஸ் அளவு குறைவாக இருக்கும். இதனால் இது போன்ற பழங்களை பயமின்றி எடுத்து கொள்ளலாம்.
5. பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் செய்த அரிசிகளை சாப்பிடுவதை தவிர்த்து சர்க்கரை வியாதியுள்ளவர்கள் கைக்குத்தல் அரிசியை சாப்பிட வேண்டும்.
6 நீரழிவு நோயிருந்தால் கிழங்கு வகைகள் அதிகமாக சாப்பிட மாட்டார்கள். ஏனெனின் இது சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆனால் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |