உங்கள் வயிற்று ஆரோக்கியத்தைப் பாதிக்கும் 3 காலை உணவுகள்! என்ன சாப்பிடலாம்?
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய காலை உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
ஏனெனில், நாம் காலையில் சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, காலை உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதே நேரத்தில், காலையில் வெறும் வயிற்றில் எந்த உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் தேவை. சில உணவுகள் குறிப்பிட்ட நபர்களுக்கு வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது அமிலத்தன்மை (Acidity), நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று எரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்
சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலுமிச்சைச் சாறு: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்கள் சிலருக்கு வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது வயிற்று எரிச்சல் அல்லது அசிடிட்டியை ஏற்படுத்தலாம்.
பிளாக் காபி (Black Coffee): காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது சிலருக்கு வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரித்து, நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

காரமான உணவுகள்: அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக இருக்கும்.
எனவே, காலை உணவைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்து, சத்தான உணவுகளுடன் நாளைத் தொடங்குவது அவசியம். சிறிய உணவுப் பழக்க மாற்றங்கள்கூட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
அந்தவகையில் காலையில் சாப்படும் முதல் உணவை எவ்வாறு தெரிவு செய்வது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த காணொளி வாயிலாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |