தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது!
உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
அந்த வகையில், அளவில் சிறியதாக இருந்தாலும் ஏராளமான சத்துக்களைக் கொண்டவை விதைகள். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் பூசணி விதைகள்.

பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றைச் சிற்றுண்டியாகவோ அல்லது சாலட் உள்ளிட்ட உணவுகளுடனோ சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பாக, தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை 30 நாட்கள் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பூசணி விதைகள் தரும் 6 முக்கிய நன்மைகள்
1. இதயத்திற்கும் தசைகளுக்கும் நல்லது
பூசணி விதைகளில் மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இதயம் மற்றும் தசைகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க பெரிதும் துணைப்புரியும்.

2. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், காயங்கள் விரைவில் குணமடையவும் உதவுகிறது. தினசரி பூசணி விதைகள் சாப்பிடுவதால் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு பெற உதவும்.
3. உடல் எடையைக் குறைக்க உதவும்
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குறைந்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், இதில் கலோரிகள் அதிகம் என்பதால் அளவோடு சாப்பிடுவது அவசியம்.

4. ஆண்களின் கருவுறுதல் ஆரோக்கியத்திற்கு உதவும்
பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் தரத்திற்கு முக்கியமானது. எனவே, ஆண்கள் பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
5. மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்
பூசணி விதைகளில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போன்ற தன்மை கொண்ட தாவரச் சேர்மங்கள். இவை நிறைந்த உணவுகள் மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

6. நல்ல தூக்கத்திற்கு உதவும்
பூசணி விதைகளில் உள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம், தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் நல்ல தூக்கத்தைப் பெறமுடியும். பூசணி விதைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் அதனை முறையான மருத்துவ ஆலோசனையுடன் அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |