இரவு நேரங்களில் இந்த பானங்களை மறக்காம குடிங்க.. சர்க்கரை கட்டுக்குள் வைக்கலாம்
உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள்.
“சர்க்கரை நோய்” என்பது நாள்பட்ட நோயாகவும் முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாகவும் பார்க்கப்படுகின்றது.
இதனை நினைவுப்படுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி “உலக சர்க்கரை நோய்” தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவு பழக்கவழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பானங்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் பானங்கள்
1. புதினா அல்லது சீமைச்சாமந்தி டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை தினமும் இரவு குடிக்கலாம். ஏனெனின் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது.
2. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆப்பிள் சீடர் வினிகர் பிரபலமாக உள்ளது. இதனை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்கலாம். இதனை இரவு வேளைகளில் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
3. இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் முக்கிய பொருளாக பட்டை பார்க்கப்படுகின்றது. இதனை நீரில் ஊற வைத்து தினமும் குடித்து வந்தால் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். மருந்து, மாத்திரை எடுத்து கொள்ளாது சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.
4. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம் பால் குடிப்பது நல்லது. ஏனெனின் பாதாம் பாலில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. அத்துடன் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. இரவு வேளைகளில் இந்த பாலை குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும்.
5. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். ஏனெனின் மஞ்சள் கலந்த பாலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. தூங்குவதற்கு முன்னர் குடித்தால் நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |