சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படும் இளைஞர்கள்..காரணம் என்ன? ஆய்வுகளின் விளக்கம்
சர்வதேச “சர்க்கரை நோய் தினம்” இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலகளவில் ரீதியில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையும் தற்போது இருக்கும் எண்ணிக்கையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சர்க்கரை நோயின் தாக்கம் குறித்து வெளியாகியுள்ள புள்ளி விபரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பது வளர்ந்த நாடுகளுக்கு பெறும் இழப்பாக கருதப்படுகிறது.
இன்சுலின் குறைபாட்டினால் ஏற்படும் இந்த நோய் நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும். ஆனால் வளர்ந்த நாடுகளில் 44 கோடி இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வகையில் இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு என்ன காரணம் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இளைஞர்களை சர்க்கரை நோய் தாக்க என்ன காரணம்?
1. கடந்த காலங்களில் படிப்பு, தொழில் காரணமாக இளைஞர்களிடம் உடல் உழைப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் திரை நேரமும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக சர்க்கரை நோய் ஏற்படலாம்.
2. ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை சிறுவயது முதல் ஊக்குவிக்க வேண்டும். வழக்கமாக வீடுகளில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறான நாட்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
3. கலோரிகள் அதிகம் உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆகிய மோசமான உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.
4. நீரிழிவு நோய்க்கு அதிக எடையும் முக்கிய காரணமாக அமைகின்றது. இளைஞர்கள் எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் சிறுவயதிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்கள்.
5. பரம்பரை வாயிலாகவும் சர்க்கரை நோய் ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் அதே பரம்பரையில் இருக்கும் இளைஞர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளது.
6. சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது, தாமதமாக தூங்குவது, காலையில் தாமதமாக எழுவது போன்ற மோசமான பழக்கங்கள் காரணமாகவும் சர்க்கரை நோய் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |