பப்பாளி பழத்துடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும். ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பப்பாளியுடன் சாப்பிடக் கூடாதவை
பப்பாளி சாப்பிட்ட பின்னர் வெள்ளரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து காணப்படுவதால் இது வாய்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதக விளைவை கொடுக்கும்.
பப்பாளி சாப்பிட்ட பிறகு உடனேயே முட்டை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் . இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி என இவை அனைத்தும் அமிலத்தன்மை அதிகம் நிறைந்த உணவுகள் பப்பாளி சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றுடன் பப்பாளி பழத்தை சேர்த்து உண்ணக் கூடாது.
பப்பாளியில் உள்ள என்சைம்கள் பால் பொருட்கள் செறிமானமாவதை கடினமாக்கிவிடும் பப்பாளி செரிமானத்தை சீர்செய்யும் தன்மை கொண்டது தான் ஆனால், பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதேனும் பால் பொருட்களை எடுத்துக் கொண்டால், அது செரிமான அமைப்பை பாதிக்கிறது.
பப்பாளி சாப்பிட்ட பிறகு முட்டை சாப்பிடுவது உங்களை உடல்நிலை பாதிக்கப்படும். பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது.
அத்துடன் முட்டையும் சேர்ந்தால் அதில் இருக்கும் புரதம் மற்றும் ஒமேகா-3 கலந்து வயிற்றில் குழப்பம் ஏற்பட்டு நீண்ட நாள் நோய்வாய்ப்பட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அஜீரணம், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் எழுகின்றன.
மேலும் பப்பாளி சாப்பிட்ட உடனேயே குளிர்ந்த நீரை பருகுவது பல செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். அதோடு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. அதனால் அசௌகரியமா நிலை உருவாகும்.
அப்படியும் பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்வது சிறந்தது.
ஆராக்கியம் நிறைந்த பப்பாளி பழத்தின் முழுமையாக பலனை பெற வேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட உணவுகளும் சேர்த்து உண்பதை தவிர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |