மிலிட்டரி தூக்க முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது தெரிந்தால் 10 விநாடிகளில் தூங்கிவிடலாம்
பொதுவாகவே தற்காலத்தில் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று தான் தூக்கமின்மை. நாள் முழுக்க வேலை செய்து களைத்திருந்தாலும், படுத்த உடனே நம்மில் பலருக்கும் தூக்கம் வருவதில்லை.
நிம்மதியின்மை, கவலை போன்ற காரணங்களால் பலரும் தூக்கமின்மை பிரச்சினை காணப்படுகின்றது. போதாக்குறைக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாகவே பலரும் இரவில் அதிக நேரம் விழித்திருக்கின்றனர்.
தூக்கமின்மை
எனவே வெகுநேரம் தூக்கம் வராமல் தவிப்பது அல்லது தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்து மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனைகள் அனேகமானோருக்கு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
இதனால் பல உடல்நல பிரச்சனைகள் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆனால் வெறும் 10 நொடிகளில் உங்களால் தூங்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
அதற்கு நீங்கள் மிலிட்டரி தூக்க முறையை கையாள வேண்டும். அதை எப்படி கையாள்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மிலிட்டரி தூக்க முறை
இரண்டாம் உலகப் போரின் போது, வீரர்கள் தங்களுக்கு கிடைத்த குறைவான நேரத்தில் நிறைவான தூக்கத்தை பெற வேண்டி இருந்தது.
இதற்காக ராணுவ வீரர்கள் பயன்படுத்திய முறை தான் மிலிட்டரி தூக்க முறை. எப்படி மேற்கொள்ள வேண்டும்? உங்கள் வாயில் உள்ள தசைகள் உட்பட உங்கள் முழு முகத்தையும் ரிலாக்ஸாக வைத்து கொள்ள வேண்டும்.
உங்கள் தோள்களை ரிலாக்ஸாக விட்டு, மேலும் மனதை ஒருமுகப்படுத்தி மூச்சை வெளியே விட வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் மார்பு மற்றும் கைகளும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.
அதே போல் உங்கள் கால்கள், தொடைகளை ரிலாக்ஸாக வைத்து, அடுத்த 10 விநாடிகளுக்கு அனைத்து சிந்தனைகளையும் விலக்கி, ஒரு நிதானமான காட்சியை கற்பனை செய்து 10 வினாடிகள் உங்கள் மனதை தெளிவுபடுத்துங்கள்.
அதற்குள் உங்களுக்கு தூக்கம் வந்து விடும். இந்த முறையை பழக்கப்படுதிக் கொண்டால் தூக்கமின்மை பிரச்சினைக்கு எளிமையாக முடிவுகட்டிவிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |