அரிசி கழுவிய நீர் எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா? இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க
பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது.
கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி கழுவிய நீரின் பயன்கள்
தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் இந்த அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுகிறது. தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி தண்ணீர் கொண்டு அலசினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், என்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின்- பி மற்றும் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும், சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.
அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும்போதும் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.
தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை போத்தலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்க முடியும்.
தலைக்கு ஷெம்பூ பயன்படுத்தி குளித்தபின்பு, அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும்.
பிறகு, 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து, சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
இதனால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் பளபளப்புக்கும் துணைபுரிகின்றது.
அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, செல்கள் புத்துணர்ச்சி பெறும். சருமப் பொலிவு அதிகரிக்கும்.இதில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு, முகப்பரு, தோல் அழற்சி ஆகியவற்றை நீக்கும்.
தூய்மையான பருத்தித் துணியை அரிசி நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால், சருமத் துளைகள் மறைந்து சர்மம் பொலிவு பெறும்.
அரிசி நீரில் உள்ள துவர்ப்புத் தன்மை, எண்ணெய்ப் பசையைக் குறைத்து முகப்பருவைத் தடுக்க உதவுகின்றது.
தேங்காய் எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், சிறிது அரிசி நீரைக் கலந்து தடவும்போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இளமைப் பொலிவு அதிகரிக்கும்.
இயற்கை முறையில் முகத்தை சிகப்பழகாக்க விரும்புபவர்கள் வாரத்திற்கு 2 முறை அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |