ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... ஆபத்து உறுதி!
பொதுவாகவே ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் பழமாக காணப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் ஆப்பிளின் நன்மைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மட்டுமின்றி, ஓர் இரு ஆப்பிளை தினசரி தொடர்ந்து சாப்பிடுவதால், உங்கள் நோய்கள் அனைத்தும் தடுக்கப்படுகிறது.
ஆப்பிள்களில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன, குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின்கள் ஆகியன செறிந்து காணப்படுகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த ஆப்பிளை சாப்பிட்ட உடனேயே குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அப்படி ஆப்பிள் பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் குறித்தும் அதன் பாதக விளைவுகள் தொடர்பிலும் முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
தயிர்
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தயிர் பாலுடன் தயிர் மற்றும் இறைச்சியுடன் மீனையும் சாப்பிடக்கூடாது என்பது எப்படி அறிவுறுத்தப்படுகிறதோ, அதே போல் ஆப்பிளை சாப்பிட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு தயிர் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் உடனடியாக தயிரை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால், ஆப்பிள் மற்றும் தயிர் இரண்டின் கலவை உடலை வெகுவாக குளிர்ச்சியாக்க சுடியது. இது ஒன்றாக உட்கொண்டால், சளி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
புளிப்பான பொருட்கள்
ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் புளிப்பு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக ஊறுகாய் அல்லது எலுமிச்சை உட்கொள்ளல் உங்களுக்கு வாயு, அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே குறைந்தது 2 மணி நேரத்திற்கு புளிப்பான விஷயங்களை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
தண்ணீர் குடிக்கக் கூடாது
சிட்ரஸ் பழங்கள் அல்லது இனிப்புப் பழங்களை உட்கொண்டதன் பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். இது உங்கள் pH அளவில் தாக்கம் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று பாக்டீரியா மற்றும் வாயுக்கோளறு ஆகிய ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆப்பிள் உட்கொண்ட பின்னர் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் ஈஸ்ட் உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கின்றது, இதனால் வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
முள்ளங்கி
ஆப்பிள் சாப்பிட்ட உடனேயோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு உள்ளேயோ முள்ளங்கி சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.இது சருமத்தில் சொறி அல்லது அலர்ஜியை உண்டாக்கும் என குறிப்பிடப்படுகின்ற போதிலும் இதற்கு அறிவியல் ஆதாரங்கள் இன்னும் பெறப்படவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |