பெண்களின் உதடுகளின் வடிவம் வைத்தே அவர்கள் ஆளுமை சொல்லலாம் - உங்கள் உதடு எப்படி?
பெண்களின் உதட்டின் வடிவம் வைத்தே அவர்களின் ஆளுமை பற்றி கூற முடியும். இதில் உங்கள் ஆளுமையை அறிந்து கொள்ளுங்கள்.
உதட்டின் வடிவம்
நமது உதடுகள் நமது உணர்ச்சி நிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. உதடுகளில் தான் பல உணர்வுகள் சேர்க்கப்படுகின்றன. பதட்டம் முதல் பயம் வரை, நமது உதடு அசைவுகள் மூலம் பல விஷயங்களைக் கண்டறிய முடியும்.
இது தவிர நமது உதடுகளின் நிறம் முக்கியமாக தோலின் கீழ் தெரியும் இரத்த நுண்குழாய்களால் ஏற்படுகிறது. எனவே தான் உதடுகளின் வடிவத்தை வைத்து ஆளுமையை கூறுகிறார்கள்.
கீழ் உதடு மேல் உதட்டை விட பெரியது - மேல் உதட்டை விட கீழ் உதட்டு பெரிதாக இருந்தால், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். உங்களுக்கு வேடிக்கை சாகசம் என்றால் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் புதியவருடன் பழக ஆசைப்படுவீர்கள். புதிய இடங்களை பார்வை இடுவது உங்களுக்கு பிடிக்கும்.
மேல் உதடு கீழ் உதட்டை விட பெரியது - மேல் உதடு கீழ் உதட்டை விட பெரிதாக உடையவர்கள் எளிமையை விரும்பக்கூடியவர்கள். தனக்கு மகிழ்ச்சியை தரும் தேவையற்ற பொருட்களை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் நகைச்சுவையை விரும்புபவர்கள். இப்படி நகைச்சுவை கொண்ட எந்த நபர் இருந்தாலும் அவர்களையும் உங்களுக்கு பிடிக்கும். உங்களுக்கு நண்பர்கள் ஏராளம்.
வீங்கிய உதடுகள் - இயற்கையாகவே பெரிய மற்றும் பருமனான உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் பச்சாதாபம் கொண்டவர்கள். இவர்களுக்கு தாய்வழி உறவில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். இவர்கள் சாப்பாட்டு விரும்பியாக இருப்பார்கள். தனக்கு பிடித்தவர்களை உச்சத்திற்கு கொண்டு வருவார்கள. மற்றவர்கள் இடத்தில் நிறைய அன்பு செலுத்துவார்கள்.
தேனீ கொட்டிய சிறிய உதடுகள் - தேனீ கொட்டியது போல சிறிய வீங்கிய உதடு அமைப்பு கொண்டவர்கள் தங்களை முன்னிலை படுத்த நினைப்பார்கள். ஆனால் அவர்கள் சுயநலவாதிகள் இல்லை. ஆனால் அவர்களுக்கு அவர்கள் மட்டும் தான் முக்கியம் மற்றவர்கள் முக்கியம் இல்லை. நண்பர்களிடம் சுயநலவாதிகளாகவும் இருப்பார்கள்.
மெல்லிய உதடுகள் - மெல்லிய உதடுகளைக் கொண்டவர்கள் தனிமையை விரும்புகிறார்கள். அதிலும் இவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே செய்வார்கள். இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அதிகம் பேச்சு திறன் கொண்ட நபர்கள். இவர்கள் தங்கள் நேரத்தை ஒருபோதும் தேவை இல்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். அவர்கள் தெளிவான வாழ்க்கை இலக்குகளைக் கொண்ட கூட்டாளர்களுடன் இணக்கமாக இருப்பார்கள்.
மன்மதன் வில் போன்ற உதடுகள் - மன்மத உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் அழகானவர்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தங்களை முன்னிலைப்படுத்த புதிய வழிகளை ஆராய்வார்கள். இவர்களிடம் நல்ல பேச்சு திறன் இருக்கும். மற்றவர்களை கவரக்கூடிய ஆளுமை இவர்களிடம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |