விவாகரத்து ஆனாலும் சைந்தவி என் மகள்தான் - ஜி.வி.பிரகாஷின் தாயார் நெகிழ்ச்சி!
ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் விவாகரத்து பெற்று பிரிந்திருந்தாலும், சைந்தவி மீதான தனது அன்பு ஒருபோதும் குறையாது என ஜி.வி.பிரகாஷின் தாயார் ரைஹானா தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பிரிவுக்குப் பின்னும் குறையாத பாசம்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரும் பிரபல பாடகி சைந்தவியும் சிறுவயது முதலே நண்பர்களாகப் பழகி, பின்னர் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

சுமார் 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்தத் தம்பதியினர், கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வாழத் தொடங்கினர்.
தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். இருப்பினும், மகள் அன்வியின் நலனைக் கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து குழந்தையை வளர்த்து வருகின்றனர்.அதன்படி, மகள் இருவருடனும் மாறி மாறி வசித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷின் தாயார் உருக்கம்
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் தாயார் ரைஹானா, சமீபத்தில் சைந்தவியைப் பேட்டி கண்டபோது அவருடனான உறவு குறித்துப் பேசியுள்ளார்.
அப்போது, “எத்தனையோ காம்பினேஷன்கள் வந்தாலும் இந்தக் காம்பினேஷன் மிகவும் ஸ்பெஷல். எங்களுக்கிடையிலான உறவு மாமியார் - மருமகள் உறவையும் தாண்டியது. உங்கள் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் எப்போதும் என் மகள்தான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள்
மேலும், தனது இசை நிகழ்ச்சி ஒன்றுக்குப் பாடகியைத் தேடியபோது, ஜி.வி.பிரகாஷ் சைந்தவியைப் பரிந்துரைத்ததாகவும், அப்போதுதான் அவரை முதன்முதலில் சந்தித்ததாகவும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
விவாகரத்துக்குப் பின்னரும் முன்னாள் மருமகளைத் தனது மகளாகவே கருதுவதாக ரைஹானா தெரிவித்திருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. திருமண உறவு முடிந்தாலும் அன்பும் பாசமும் தொடரலாம் என்பதை அவரது வார்த்தைகள் பறைசாற்றியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |