கல்லீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்கணுமா? இந்த உணவுகளை தொட்டும் பாக்காதீங்க!
மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரல் ஆகும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பாகும். இது உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கிக் கொடுக்கின்றது.
எனவே தான் கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாக அறியப்படுகின்றது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரலின் பங்கு இன்றியடையாதது.
தற்காலத்தில் துரித உணவுகளை உட்கொள்ளும் அளவு அதிகரித்தமை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் ஆகியன காரணமாக கல்லீரல் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் அதிகமானோர் கல்லீரல் புற்றுநோயாலும் கொழுப்பு கல்லீர் நோயாலும் பாதிக்கப்படுகின்றார்கள்.
கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
அந்தவகையில், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கொழுப்பு கல்லீரல் நோயை தடுக்கவும் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து, இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
சர்க்கரை மற்றும் சேர்க்கப்பட்ட மென்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக NAFLD, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.
இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவும் கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கவும் பங்களிக்கக்கூடும்.
மிட்டாய், ஐஸ்கிரீம் மற்றும் சோடா மற்றும் பழ பானங்கள் போன்ற இனிப்பு பானங்களில் சர்க்கரையைச் சேர்க்கிறார்கள். சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், பேக்கரி பொருட்கள் மற்றும் கடையில் பிரக்டோஸ் மற்றும் கார்ன் சிரப் போன்ற பிற சர்க்கரைகளைத் தவிர்ப்பது கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரியும்.
எண்ணெயில் ஆழமாக பெரித்த அல்லது உப்பு நிறைந்த உணவுகள் அதிகப்படியான கொழுப்பு, அல்லது உப்பு நிறைந்த உணவுகள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்க வாய்ப்புள்ளது மற்றும் ஒரு நபருக்கு உடல் பருமனை ஏற்படுத்தக்கூடும், இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கான பொதுவான காரணமாகும்.
மேலும் பதப்படடுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக நுகருவது கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தும் முக்கிய உணவுக்பொருளாக அறியப்படுகின்றது. உதாணமாக, உடன் நுடில்ஸ்கள், ஜிப்ஸ் பாக்கட்டுகள், பதப்படுத்தப்பட்ட மிட்டாய் வகைகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |