தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு உணவு கட்டுப்பாடு தேவையா? விளக்கும் மருத்துவர் அருண்குமார்
பொதுவாகவே பாலூட்டும் தாய்மார்கள் வீட்டில் இருந்தால், உறவினர்கள் அவர்களை உணவு விடயத்தில் பெரிதும் கட்டுப்படுத்தி வைக்கும் வழக்கம் காணப்படுகின்றது.
உண்மையில் தாய் சாப்பிடும் உணவுகள் குழந்தைக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் வாயு தொல்லையை ஏற்படுத்துமா? என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் ஆம் என்று தான் இருக்கும்.
இவ்வாறு பின்பற்றப்படும் நடைமுறையில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது? தாய் சாப்பிடும் எந்த வகை உணவுகள் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் என்ன சொல்லியிருக்கின்றார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?
குடும்பங்களில் உள்ள பல பெரியவர்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாக நம்புகிறார்கள்.
இந்த பாரம்பரிய அறிவு அல்லது கட்டுக்கதைகளின் அடிப்படையில் காரமான உணவுகள், சில பழங்கள், கடல் உணவுகள் மற்றும் சில காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
உண்மையில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்று பெரிதாக எதுவும் கிடையாது.காரணம் தாய்மார்கள் சாப்பிடும் உணவுகள் நேரடியாக தாய் வழியாக குழந்தைக்கு போய் சேர்வது கிடையாது.
பெரும்பாலும் தாய் பால் கொடுக்கும் எல்லா தாய்மார்களும் எப்போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போல எவ்வகை உணவும் உண்ணலாம்.
மிதமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மட்டும் தான் அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், இதைப்பற்றி மிக கவலை படவேண்டிய அவசியமில்லை ஆனால் உண்ணும் உணவின் முறைமையில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் சில சமயம் பாலூட்டும் தாய் மார்கள் அதிக காரம் சாப்பிடுவதும், அதிக காபி குடிப்பதும் குழந்தைக்கு சில அசௌகரியங்களை தோற்றுவிக்க வாய்ப்புள்ளது. இது தவிர வேறு எந்த உணவுகளும் பெரிதாக தாக்கம் செலுத்துவது கிடையாது என மருத்துவர் அருண்குமார் தெரிவிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |