நாகம்– ராஜநாகம் இரண்டுக்கும் இடையில் இவ்வளவு வித்தியாசம் இருக்கா? வியப்பூட்டும் தகவல்
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே இனம்புரியாத ஒரு பீதி ஏற்படும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அதற்கு காரணம் அதன் கொடிய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பது எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் ,இரையை எளிமையாக வேட்டையாடுவதற்காகத்தான்.
ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்அல்ல. மாறாக மனிதர்கள் அதனை தாக்கக்கூடும் என்ற பயத்தின் காரணமாகத்தான்.
பாம்புகளின் வகைகளில் நாகப்பாம்புகள் என்றாலே பலரும் அதிகமாக அச்சப்படுவதற்கு காரணம் இதன் விஷம் மட்டுமல்ல.நாகபாம்புகள் பற்றி தொன்று தொட்டு புனையப்பட்டு வந்துள்ள கதைகளும் கூட தான்.
நாகங்கள் மனித உருவம் எடுக்கும். பழிவாங்கும் போன்ற பல சினிமா படங்களும் சீரியல்களும் ஏறாளமாக காணப்படுகின்றது. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் நாகப்பாம்புகள் (கோப்ரா) உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் பட்டியலில் முக்கிய இடத்தை பெறுகின்றது.
பெரும்பாலாக மக்கள் மத்தியில் நாகமும் ராஜ நாகமும் (கிங் கோப்ரா) ஒன்று என்ற கருத்து நிலவுகின்றது. பெயர்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டாலும் இவை இரண்டுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றது. உண்மையில் நாகம் மற்றும் ராஜ நாகம் ஆகியன வெவ்வேறு வகையான பாம்புகள் ஆகும்.
என்ன வித்தியாசம்?
நாக பாம்பின் சராசரி நீளம் 6-7 அடியான இருக்கம் ஆனால் ஒரு ராஜ நாகத்தின் சராசரி நீளம் 6 மீட்டர் (சுமார் 20 அடி) நீளம் வரை இருக்கும். நாக பாம்பின் நீளத்துடன் ஒப்பிடுகையில் ராஜநாகம் ஏறகுறைய 3 மடங்கு பெரிதாக இருக்கும்.
நாகப்பாம்பின் பிரதான உணவுகளாக எலி, தவளை, பல்லி, பறவை ஆகியவை காணப்படுகின்றது. ஆனால் ராஜ நாகம் ஏனைய உயிரினங்களை மட்டுமன்றி விஷம் கொண்ட ஏனைய பாம்புகளையும் கூட உணவாக உற்கொள்ளும்.
இது சிறிய மற்றும் பெரிய நாகப்பாம்புகளையும் அசால்ட்டாக விழுங்குவதன் காரணமாகவே இதற்கு ‘ராஜ நாகம்’ என பெயர் வந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
வயதான ராஜ நாகம் மஞ்சள், பச்சை, பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். அதன் உடலில் பெரும்பாலும் மஞ்சள் அல்லது வெள்ளை நிற கோடுகள் காணப்படும்.
இந்திய நாகப்பாம்புகள் கருப்பு, பழுப்பு, மஞ்சள், சிவப்பு அல்லது வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படுகின்றது. ராஜ நாகப்பாம்பின் கொடிய கோரைப் பற்கள் சுமார் 0.5 அங்குல (8 முதல் 10 மில்லிமீட்டர்கள்) நீளம் கொண்டதாக காணப்படும். இவை இரண்டின் ஆயுள் காலமும் கிட்டத்தட்ட ஒன்று தான் இவை 18-20 ஆண்டுகள் வாழகூடிது.
ராஜ நாகங்கள் மட்டுமே கூடுகளை அமைத்து அதில் முட்டையிடும் பழக்கத்தை கொண்டிருக்கும். மேலும் அவை தனது முட்டைகளை தாங்களாகவே பாதுகாக்கின்றன.
ராஜ நாகங்களின் கண்கள் மிகவும் கூர்மையாக இருக்கும் அதனால் 90 மீட்டர் தூரத்தில் இருக்கும் இரையை கூட அவற்றால் துல்லியமாக பார்க்க முடியும். நாகம் மற்றும் ராஜ நாகம் இரண்டுமே மிகவும் விஷத்தன்மை கொண்டதாக இருப்பினும் ராஜநாகம் ஒரு தடவை கக்கும் விஷத்தால் 20 பேரை கொல்ல முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |