எந்த குணம் கொண்ட பெண்களை திருமணம் செய்ய கூடாது? சாணக்கியர் கருத்து
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சில குணம் கொண்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள கூடாது என கூறப்படுகின்றது.

சாணக்கியர் கருத்து
கணவனுக்கு துணை நிற்காதவள் - மனைவி கணவன் காரியங்களில் துணை நிற்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவள் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், நல்ல குணம், பண்பாடு மற்றும் கடமை உணர்வு கொண்டவளாக இருக்க வேண்டும். இந்த குணம் இல்லாத பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்து கொண்டால் அவன் வாழ்க்கையில் எவ்வளவு தான் முன்னேறினாலும் வீழ்ந்து போவான்.

நண்பனை போல அல்லாதவள் - கணவருக்கு ஆதரவளிக்கும், புரிந்துகொள்ளும், ஆலோசனை வழங்கும் மனைவியே உண்மையான வாழ்க்கைத்துணை. இந்த குணம் இல்லாத பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்தால் அந்த ஆண் வாழ்க்கையில் துன்பப்படுவான் என சாணக்கியர் கூறுகிறார்.

அமைதியற்றவள் - ஒரு பெண் வருகையால் வீட்டில் அமைதி, செழிப்பு ஏற்படுகிறதோ, அந்தப் பெண் லட்சுமியின் வடிவம் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால் இதுவே மாற்றி அமைக்கும் குணம் கொண்ட பெண்ணை ஆண் திருமணம் செய்து கொண்டால் அது அந்த ஆணின் வாழ்கையையே மாற்றும்.

தீய குணம் கொண்ட பெண் - பொய் பேசும், சண்டையிடும், சோம்பேறியான பெண்ணிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். அப்பெண் வீட்டின் அமைதியைக் கெடுத்து வீட்டை அழிப்பாள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |