chanakya niti: முதுமையிலும் மகிழ்சியாக இருக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக பார்க்கப்படுகின்றது.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை.
சாணக்கிய நீதியில் வாழ்ககைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தெளிவான விளக்கம் கொடுக்கப்படுட்டுள்ளது.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் முதுமையிலும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய முக்கிய விடங்கள் தொடர்பில் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சரியான முதலீடு
சாணக்கியரின் கருத்துப்படி உங்களிடம் பணம் இருக்கும் வரையில் தான் இந்த உலகம் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும்.
எனவே முதுமையில் உங்களை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்றாலோ, நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றாலோ, இளமையில் பணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
இளமையிலேயே உழைத்து முதுமையில் சிறப்பாக வாழ்க்கை வாழ்வதற்கு பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். முதுமையில் உங்கள் செலவுகளை பார்த்துக்கொள்ளும் அளவுக்கும் பணம் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம்
சிறந்த ஒழுக்க விதிகளை கடைபிடிப்பவர்கள் வாழ்வில் ஒருபோதும் யாரையும் சார்ந்திருக்க மாட்மார்கள்.
இப்படிப்பட்ட குணம் கொண்டடவர்கள் முதுமையிலும் மகிழ்சியாக வாழ்வதற்கு தேவையான விடயங்களை முதுமை காலத்துக்கு முன்னரே சரியாக திட்டமிட்டு அமைத்துக்கொள்வார்கள்.
உதவி
இளமை காலத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்வின் கடைசி காலத்தை மிகவும் மகிழ்ச்சியாக கழிப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
கருணை உள்ளத்தோடு இளமையில் தொண்டு செய்பவர்கள் தங்களின் முதுமை பருவம் குறித்து ஒருபோதும் கவலைக்கொள்ள தேவையில்லை. மற்றவர்களுக்கு செய்த அத்தனை உதவிகளும் எதிர்காலத்தில் இரட்டிப்பாக திருப்ப கிமைக்கும். என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
உறவுகளுடன் நெருக்கம்
சாணக்கிய நீதியின் பிரகாரம் வயதான காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருந்தால், முதுமை சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என சாணக்கியர் வலியுறுத்துகின்றார்.
ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் எந்தளவுக்கு இணக்கமாக இருக்கின்றாரோ அந்தளவுக்கு முதுமை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். முதுமையில் பேரக்குழந்தைகளுடன் இருப்பதை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது.
ஆரோக்கியம்
இளமை காலத்தில் சிறந்த உடற்பயிற்சி மற்றும் முறையான உணவுப்பழக்கம் என்பவற்றை பின்பற்றியவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
இளமை பருவத்தில் பருவத்தில் ஒருவர் ஆரோக்கிய விடயத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகின்றாரோ, அந்தளவுக்கு முதுமை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |