Nail Cutterல் இந்த சிறிய ஓட்டை எதற்காக தெரியுமா?
நகவெட்டியில்(Nail Cutter) உள்ள சிறிய துளையின் பயன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நகவெட்டி
அழகு மற்றும் ஆரோக்கியதிற்காக நகங்களை அனைவரும் வாரம் ஒரு முறையாவது வெட்டுவது உண்டு. அதன் காரணமாக, நகவெட்டியும் பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசிய பொருளாக உள்ளது.
பெரும்பாலானோர், நகவெட்டியை நகத்தை வெட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துவர். ஆனால், அதையும் தாண்டி நகவெட்டியில் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.
அதில் உள்ள இரு சிறிய கத்திகள், துளையிடுவது, பாட்டில் மூடிகளை திறப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பலரும் இதனை நக இடுக்கில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது என கருதுகிறார்கள். ஆனால் அவ்வாறு பயன்படுத்துவது ஆபத்தான ஒன்று. கவனச்சிதறல் ஏற்பட்டால் கத்தியின் கூர்மையான முனைகள் விரலை துளைக்க கூடும்.
சிறிய துளையின் பயன்
அதே போல், அதன் அடிப்பகுதியில் சிறிய துளை ஒன்று இருக்கும். இந்த துளை வடிவமைப்பிற்காக உருவாக்கப்பட்டது என நினைத்து யாரும் அதை பயன்படுத்துவதில்லை.
இந்த துளையில் சாவிக்கொத்தை இணைத்து, கீ செயின் போல பயன்படுத்தலாம்.
இதன் மூலம், பயணம் அல்லது அலுவலகம் என வெளியே செல்லும் போது நகவெட்டியையும் உடன் கொண்டு சென்று அவசர காலங்களில் பயன்படுத்த முடியும்.