சொகுசு கார் வாங்கிய சிவாங்கி... விலை எத்தனை கோடின்னு தெரியுமா?
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE காரை வாங்கி, தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்கை பெற்றார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
சொகுசு கார்
இந்நிலையில் சிவாங்கி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
சிவாங்கி அப்பா, அம்மா உடன் சென்று அந்தக் காரைய வாங்கிய காணொளியை நெகிழ்சியுடன் தனது சமூக வளைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்ளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
