உடல் உறுப்பு கடிகாரக் கோட்பாடு என்றால் என்ன? விளக்கமளிக்கும் மருத்துவ நிபுணர்!
பொதுவாகவே கடிகாரத்தில் 24 மணிநேரங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் தான் நாம் இயங்குகின்றோம்.
எந்த வேலையை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நாம் முடிவு செய்வதை போலவே, நமது உள் உறுப்புகளும் எந்த நேரத்தில் எந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்று ஒரு கோட்பாட்டின் பிரகாரம் தான் இயங்குகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம், மருத்துவத்தின் அனைத்து வடிவங்களும் குணப்படுத்துதலும் பல்வேறு வகையான கோட்பாடுகள் குறித்து ஆராய்துள்ளது.
அதன் பிரகாரம் சீன மருத்துவத்தில் உடல் கடிகார கோட்பாடும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு பாரம்பரிய கோட்பாடாகும்.
அதில் உடல் உறுப்புகள் எந்த நேரத்தில் எந்த தொழிலை சீராக செய்யும் என்பது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ நிபுணர் நர்மதா அவர்கள் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். இதன்படி உடலின் உறுப்பு கடிகாரம் பற்றிய முழுமையாக விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலின் உறுப்பு கடிகாரம்
அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை - இது நுரையீரலுக்கான நேரமாக குறிப்பிடப்படுகின்றது இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்வதால் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்.
அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை - இது பெருங்குடலுக்கான நேரமாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு.
காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை - இது இரைப்பையின் நேரமாகும். இந்த நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட வேண்டியது அவசியம்.
காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை - இது மண்ணீரலின் நேரம் என குறிப்பிடப்படுகின்றது. இந்த நேரத்தில் தினசரி வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை - இது இதயத்துக்கான நேரம். இந்த நேரத்தில் மதிய உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மதியம் 1 மணி முதல் 3 மணி வரை - இது சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்தை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது. சற்று ஓய்வில் இருப்பதும் சிறப்பு.
மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை - இது சிறுநீர்ப்பையின் நேரமாகும். இந்த நேரத்தில் படிக்கலாம்.
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை - இது சிறுநீரகங்களின் நேரம். இந்த நேரத்திற்குள் இரவு உணவை முடித்து விட வேண்டியது அவசியம்.
இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை - இது பெரிகார்டியத்தின் நேரம். இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடலாம் அல்லது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் விடயங்களில் ஈடுப்படுவது சிறப்பு.
இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை - இது டிரிபிள் பர்னர் நேரமாகும். அதாவது இது உறுப்பு அமைப்பு முழுவதுமாகக் குறிக்கிறது. இந்த நேரத்தில் உடலானது அதிக வெப்பத்தை உருவாக்கும். இந்த நேரத்தில் தூங்க சென்று விட வேண்டியது அவசியம்.
இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை - இது பித்தப்பைக்கான நேரமாகும். இந்த நேரத்தில் கட்டாயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் செல்லுலார் பழுதுபார்க்கும் செயல்முறை உடலில் நிகழ்கின்றது.
நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை - இது கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டியது இன்றியமையாதது. காரணம் இந்த நேரத்தில் தான் உடல் தன்னைத் தானே சுத்தம் செய்துக்கொள்கின்றது. எனவே தான் ஆழ்ந்த தூக்கம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |