எதிரிகளே இருக்க கூடாதா? அப்போ இந்த குணங்கள் கட்டாயம் தேவை
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
சாணக்கிய நீதியை பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். அந்த வகையில் சாணக்கியரின் கருத்துக்களின் பிரகாரம் ஒருவருக்கு எதிரிகளே இருக்க கூடாது என்றால் அவர்களிடம் முக்கியமாக இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிரிகளை தவிர்க்கும் குணங்கள்
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எதிரிகள் உருவாவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் கெட்ட பழக்கங்களில் இருந்து தூரமாக இருக்க வேண்டும் என்கின்றார்.
போதைப்பொருள் பாவனை தீய நண்பர்களின் நட்பு போன்றவை நிச்சயம் உங்களுக்கு பாதகமான பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் எதிரிகளையும் உருவாக்கிவிடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் நல்ல விடயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இந்த குணம் உங்களுக்கு எதிரிகள் உருவாவதை தடுக்கும்.
உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களிடமிருந்து அமைதியான முறையில் விலகியிருக்க முயற்ச்சி செய்யுங்கள். முக்கியமாக வாக்குவாதங்களை தவிர்த்துக்கொண்டால் எதிரிகளே இருக்க மாட்டார்கள்.
தங்களின் கருத்து தான் சரி என வாதிடும் மனிதர்களை சுற்றி தான் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். சில சமயங்ளில் விட்டுக்கொடுக்கும் தன்மையும் எதிரிகள் உருவாவதை தடுக்கின்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் முக்கியமாக எதிரிகளை ஒழிக்க வேண்டும் என்றால் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சிறிய நெருப்புப்பொறி காட்டையே அழிப்பது போல் மனிதர்களின் கோபம் அவர்களின் அறிவை இழக்க வைக்கின்றது.
போரில் நூறு வீரர்களை தோற்கடிப்பதை விடவும் கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் வலிமை மிக்கது. இந்த குணம் கொண்டவர்களுக்கு எதிரிகள் உருவாவது மிகவும் அரிது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |