இரை விழுங்கி பொறி வண்டுகள் பற்றி தெரியுமா?
நாம் சூழலில் பார்க்கின்ற விலங்குகள் மற்றும் பூச்சிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.
அதுவும் குறிப்பாக பூச்சிகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவை உள்ளே இருக்கும் சிறப்பு பண்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.
ஒரு சில பூச்சி இனங்கள் இரை விழுங்கிகளாக இருக்கும். இவை பயிர்களை அழிக்கும் பூச்சிகளை சாப்பிட்டு உயிர்வாழும்.
இரை விழுங்கிகள்
அந்த வரிசையில், பகையினப் பூச்சிகளை அழித்து மனிதர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளில் ஒன்று தான் பொறி வண்டு. இவை என்னென்ன வேலைகளில் நமக்கு உதவியாக இருக்கின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
“இரை விழுங்கிகள்” என்பன இயற்கையில் உள்ள பகையினப் பூச்சிகளில் ஒரு வகையாகும். இவை மற்ற பூச்சிகளை இரையாக்கி உயிர் வாழும். உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டில் இரை விழுங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி வெற்றிகரமாக பயிர் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
கோயபல் முறை
கலிபோர்னியாவில் ஆரஞ்சு பழத் தோட்டங்களை ஆட்டி வைக்கும் பூச்சிக்களில் ஒன்றாக காட்டனி குசன் செதிள் பூச்சி பார்க்கப்படுகிறது. இந்த பூச்சிகளால் ஏற்பட்ட சேதம் விவாசாயிகளுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆய்வாளர் ஒருவர், வெடாலியா பூச்சி பொறி வண்டுகளை கொண்டு வர ஏற்பாடு செய்து, அதன் மூலம் பூச்சிகளை அழித்துள்ளார்.
ஒட்டுண்ணிகள், இரை விழுங்கி பூச்சிகள் ஆகியவற்றை கொண்டு பயிர்களை விவாசாயிகள் பாதுகாத்து வந்தனர். இதனையே “கோயபல் முறை” என்கிறார்கள்.
பொறி வண்டுகள் உயிரியல் முறை பூச்சி கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பல முக்கியப் பயிர்ப் பூச்சிகளை அழிக்கும் பொறிவண்டுகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது.
உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு சரித்திரத்தில் சாதனை படைத்த வெடாலியா பூச்சி, பொறி வண்டு இனத்தை சார்ந்தது. ஆரஞ்சு மரங்களை தாக்கும் ஐசிரியா, பர்சேசி என்ற வெள்ளை செதில் பூச்சிகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
வாழும் காலம்
பொறி வண்டுகள் பட்டாணி கடலையினை உடைத்து வைத்தார் போல இருப்பதால் “கடலை வண்டுகள்” என்றும் அழைப்பார்கள். வண்டுகளும் புழுக்களும் பயிர் பூச்சிகள் ஆகிய அசுவினி, இலைப்பேன், கள்ளிப்பூச்சி ,மாவுப் பூச்சி, செதில் பூச்சி ஆகியவற்றை உண்ணும் புழு பருவம் 18ல் இருந்து 23 நாட்களும் வண்டுகள் 45 நாட்களும் உயிர் வாழும்.
பொறி வண்டுகளும் அதன் பயன்பாடுகளும்
- திராட்சை, கொய்யா, ஆரஞ்சு மற்றும் இதர பழ மரங்களை தாக்கும் மெக்கோ நெல்லிக்காக்கஸ் மற்றும் பெர்ரிசியா என்ற மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்த கிரிப்டோலிமஸ் மற்றும் ஸ்கைமினஸ் ஆகிய பொறி வண்டுகள் பயன்படுத்தப்படுகிறது.
- தென்னை செதில் பூச்சினை கட்டுப்படுத்தும் கைலோகோரஸ் என்ற பொறி வண்டு பயன்படுத்தப்படுகிறது.
- பருத்தி, அஸ்வினி, இலைப்பேன் முதலியவற்றை உண்ணும் கைலோமெனஸ் மற்றும் நெற்பயிற் பூச்சிகளை உண்ணும் காக்சிநெல்லா பொறி வண்டுகள் பயன்படுத்தப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
