Podi Poriyal: விஜய் சேதுபதிக்கு பிடித்த கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்ட போது அவருக்கு கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல் தான் மிகவும் பிடிக்கும் என கூறியிருப்பார்.
அந்த வகையில், கடலை பொடி போட்டு செய்யும் பீன்ஸ் பொரியல் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கடலை பருப்பு – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெரிய வெங்காயம் – 1
- பீன்ஸ் – ஒன்றரை கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
கடலை பொடிக்கு தேவையான பொருட்கள்
- வரமிளகாய் – 2
- வறுத்த வேர்க்கடலை – அரை கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வரமிளகாய், வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் மூன்றையும் ஒன்றாக போட்டு வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், வறுத்த கலவையை ஒரு சுத்தமான மிக்ஸிஜாருக்கு மாற்றி, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து, கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொரிய விடவும்.
கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதங்க விட்டு, அதில் பீன்ஸ், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக வதங்க விடவும்.
கடைசியான அரைத்து வைத்துள்ள வறுத்த கடலைப்பொடியை சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு இறக்கினால் சூப்பரான் பீன்ஸ் பொரியல் தயார்! சூடான சாதம், சாம்பார், தயிர் உடன் சேர்த்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
