இந்த பழக்கங்களை கொண்ட பெண்கள் சிறந்த மனைவியாக இருக்கவே முடியாது... சாணக்கியரின் எச்சரிக்கை!
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை.
அந்தவகையில் சாணக்கிய நீதியின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பழக்கங்களை கொண்ட பெண்கள் குடும்ப வாழ்க்கைக்கு பொருத்தமற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி இவர்கள் மிகவும் மோசமான மனைவியாக இருப்பார்களாம். அப்படி சாணக்கியர் வரையறுக்கும் மோசமான மனைவிகளிடம் இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களிடம் இருக்க கூடாத குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் புத்திக்கூர்மை இல்லாத பெண்கள் திருமண வாழ்விற்கு பொருத்தமற்றவர்களாக இருக்கின்றனர். புத்திகூர்மை என்பது கல்வியில் சிறச்தவர்களாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது.
சூழ்நிலைகளை புரிந்துக்கொண்டு செயற்படும் குணம் இல்லாத பெண்கள் மோசமான மனைவியாக அமைவார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பொறுமையற்றவர்கள் சிறந்த மனைவியாக இருக்க வாய்ப்பே இல்லை என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
திருமண வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் அவசரத்தில் எடுக்கும் முடிவுகளால் தான் ஏற்படுகின்றது. இந்த குணம் இல்லாவிட்டாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனவே பொறுமையற்ற பெண்கள் நல்ல மனைவியாக வாழ முடியாது என்கின்றார்.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் பணத்தை அதிகமாக செலவு செய்யும் குணம் கொண்ட பெண்கள் குடும்பத்தை பற்றிய அக்கறையை கொண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட பெண் நல்ல மனைவியாக இருக்க முடியாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சொந்த வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் மற்றவர்களிடம் இருக்கும் செல்வம் மற்றும் அழகு குறித்து எப்போதும் சிந்திக்கும் குணம் கொண்ட பெண்கள் குடும்ப வாழ்விற்கு பொருத்தமற்றவர்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
இந்த குணத்தை கொண்ட கொண்ட பெண்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழவேமாட்டார்கள். அதுமட்டுன்றி மற்றவர்களிடமிருக்கும் நல்லதை பார்க்காமல் எப்போதும் குறைகளை மட்டுமே பார்க்கும் குணம் கொண்டவர்கள் பெண்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாக வாழவே முடியாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
வாழ்க்கையில் எந்தவொரு கடினமான கட்டத்தையும் அறிவால் கடக்க முடியும். ஆனால் எந்த வகையிலும் அறிவு இல்லாத பெண் பெரும்பாலும் திருமண வாழ்க்கையில் நிம்மதியின்மையை ஏற்படுத்துவார் என்று சாணக்கிய நீதி கூறுகிறது
பொறுமையற்றவர்கள் பொறுமை இல்லாத பெண்களால் நல்ல திருமண வாழ்க்கையை வழங்க முடியாது. திருமண வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் இங்கிருந்துதான் தொடங்குகின்றன. உங்கள் மனைவி பொறுமையற்ற பெண்ணாக இருந்தால், கடினமான சூழ்நிலைகளை அவர்களால் சமாளிக்க முடியாமல் போவது மட்டுமல்லாமல், குடும்ப வாழ்க்கையையும் அவர் சீர்குலைப்பார் என்று சாணக்கிய கூறுகிறார். அதிகமாக செலவு செய்யும் பெண் உங்கள் மனைவி அதிகம் செலவழிப்பவராக இருந்தால், அவர்கள் திருமண வாழ்க்கையில் அதிக சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் மனைவி நிலைமையை புரிந்து கொள்ளாமல், வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அது உங்கள் திருமணத்தில் அமைதியின்மையையும், சிக்கல்களையும் உருவாக்குகிறது. இது உங்கள் வாழ்க்கையை மிகவும் சவாலானதாக மாற்றும். எனவே இதுபோன்ற விஷயங்களில் மனைவியைக் கட்டுப்படுத்துவது அவசியம். பொறாமை பெண்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையை பொறாமை மற்றும் வெறுப்புடன் பார்த்தால், அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் காணாமல் போகும். இது ஆண்களின் மன அமைதியைக் கெடுக்கிறது. இந்த விஷயங்கள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இல்லையேல் வாழ்க்கையில் அதிக சவால்களை ஏற்படுத்தும். மற்றவர்களைக் குறைகூறுவது உங்கள் மனைவி மற்றவர்களைக் குறை கூறினால் கவனமாக இருங்கள். ஏனெனில் அது ஒரு நல்ல பண்பு அல்ல மேலும் உங்கள் வாழ்க்கையில் அதிக சவால்களையும் பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. இது உங்கள் வாழ்க்கையில் அதிக எதிரிகளை உருவாக்கும். இதனால் வாழ்க்கையில் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் மனைவியிடம் இந்த குணம் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது.