டுபாயில் தங்கக் காரை வென்ற இலங்கையர் - பின்னணி காரணம் இதோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கை சேர்ந்த சுமித் கூப்பனில், 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள 'பென்ஸ்' காரை பரிசாக வென்றுள்ளார்.
இலங்கை இளைஞர் சுமித்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கை இளைஞர் சுமித், தங்க முதலீட்டின் மூலம் பெரும் அதிர்ஷ்டத்தை தன்வயப்படுத்தி உள்ளார்.
துபாய் கோல்ட் மாவட்டத்தில் சுமித், பிரபல நகைக்கடை ஒன்றில், இலங்கை மதிப்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டி ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
இதற்காக அவருக்கு பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. துபாய் ஷாப்பிங் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில், அவருக்கு, , இலங்கை மதிப்பில் 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நிற 'மெர்சிடிஸ் பென்ஸ்' கார் பரிசாக விழுந்துள்ளது.

சுமித் வென்ற கார் அவர் முதலீடு செய்ததை விட 50 மடங்கு விலை அதிகம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சுமித் கூறும் போது இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பி தூங்கிக் கொண்டிருந்தபோது, வெற்றியை அறிவிக்கும் தொலைபேசி அழைப்பு வந்ததாக சுமித் தெரிவித்தார்.
மின்னஞ்சலில் செய்தியை பார்த்ததும், கடவுளுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். முதலில் இது உண்மைதான் என நம்ப முடியாமல் இருந்ததாகவும், விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் நம்பிக்கை வந்ததாக அவர் கூறினார்.

மெர்சிடிஸ் போன்ற சொகுசு காரை சொந்தமாக வைத்திருப்பதை ஒருபோதும் கற்பனை செய்யவில்லை என்று தெரிவித்த சுமித், பலர் காரை விற்று பணமாக மாற்றுமாறு ஆலோசனை வழங்கினாலும், தற்போதைக்கு காரை ஓட்டியே பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
“இந்த வெற்றி எனக்கு வெறும் பணம் அல்ல. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்,” என்று அவர் கூறினார். தங்கத்தை முதலீடாக மட்டுமே வாங்கிய நிலையில், எதிர்பாராத வகையில் கிடைத்த இந்த வெற்றி ஒரு ஆசீர்வாதம் என அவர் தெரிவித்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |