தினமும் பாதாம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
தினமும் சிறிதளவு பாதாம் சாப்பிட்டால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பாதாம்
உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கின்றது. அதிகளவில் சத்துக்கள் கொண்ட கொட்டைகளில் பாதாம் மிகவும் முக்கியமானது ஆகும்.
சிறுவயது முதல் பாதாமை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மூளை ஆரோக்கியமாக இருப்பதுடன், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
தினமும் பாதாமை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நன்மைகள் என்ன?
குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது. இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், குடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்கின்றது.
இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது. இதில் நல்ல கொழுப்புகள் அதிகமாக காணப்படுவதால் கெட்ட கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதுடன் ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.

இதிலுள்ள வைட்டமின்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருப்பதுடன், ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தவும், ரத்த நாளங்களை பாதுகாக்கவும் செய்கின்றது. மேலும் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் இளமையாக வைத்திருக்க உதவுகின்றது.
இதிலுள்ள மெக்னீசியம் நமது எலும்பு வலிமையை பாதுகாப்பதுடன், இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளை வலுவாக்குகின்றது.

எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பாதாம் சிறந்த தேர்வாக இருக்கின்றது. இவை பசியை கட்டுப்படுத்த உதவுவதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
பாதாமில் உள்ள எல் கார்னைடைன் மற்றும் ரிபோஃப்ளாவின் சத்துக்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன், மறதி நோயான அல்சைமர் வராமலும் தடுக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |