எடையை குறைக்கவும், முடி கருமையையும் தரும் பூண்டு தொக்கு எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான பூண்டு தொக்கு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பூண்டு தொக்கு
பொதுவாக தென்னிந்திய மக்களின் காலை மற்றும் இரவு உணவு என்றால் அது இட்லி மற்றும் தோசையாகவே இருக்கும். இந்த உணவுகளுக்கு விதவிதமான சட்னி செய்து சாப்பிடுவார்கள்.
சில தருணங்களில் சாம்பார் வைப்பதும் உண்டு. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் - 8
காஷ்மீரி வரமிளகாய் - 5
பூண்டு - 1 கப்
புளி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் காரத்திற்கேற்ப தேவையான அளவு வடமிளகாய் மற்றும் 5 காஷ்மிரி மிளகாய் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் 1 கப் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் சிறிது புளியை சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஜாரில் நாம் வதக்கி வைத்த வரமிளகாயையும், காஷ்மிரி மிளகாயும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நாம் வதக்கி வைத்த பூண்டு மற்றும் புளியை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தாளிப்புக்காக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நாம் அரைத்து வைத்த தொக்குடன் சேர்த்தால் சுவையான பூண்டு தொக்கு ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |