உயிருக்கே உலை வைக்கும் மது பழக்கம்- ஒரு மாதம் நிறுத்தினால் இவ்வளவு பலன்களா?
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் குடி பழக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் குடிப்பழக்கத்தில் முழ்கி போய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற பழக்கங்கள் உடல் மற்றும் உள ரீதியிலான தாக்கங்களையும் அதிகமாக பாதிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதல்களின் படி, கொஞ்சமாக மது எடுத்து கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், கல்லீரல் நோய் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஒருவருக்கு தலை, கழுத்து, உணவுக்குழாய், கல்லீரல், மார்பகம், பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகமாக இருக்கின்றது. எனவே குடிப்பழக்கம் உடலுக்கு நல்லதை தவிர்த்து கெட்டதை வாரி வழங்குகின்றது.
இந்த பழக்கத்தை ஒரு மாதம் நிறுத்தினால் உடலில் ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகின்றது. அப்படி என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
30 நாட்கள் குடிக்காமல் இருந்தால் என்ன நடக்கும்?
1. தொடர்ந்து மது பழக்கம் உள்ளவர்கள் ஒரு மாதம் பழக்கத்தை நிறுத்தினால் கல்லீரல் உடலால் உற்பத்தி செய்யப்படும் நச்சுக்களை முறையாக உடைத்து, கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான ஹார்மோன்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்ப்படுத்தும்.
2. ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பிரச்சினைகள் வராமல் கட்டுபடுத்தப்படும். கெட்ட கொழுப்பு படிபடியாக குறைந்து நல்ல கொழுப்பு உடலில் பரவ ஆரம்பிக்கும்.
3. 30 நாட்கள் குடிக்காமல் இருக்கும் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம் குறைக்கிறது.
4. ஒரு சாதாரண கிளாஸ் பீரில் சுமார் 150 காலி கலோரிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே குடியை நிறுத்தினால் கலோரிகள் குறைந்து எடை குறையும்.
5. ஒரு முறை அதிகமாக குடிப்பது கூட உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இதனால் நோய்த்தொற்றுக்கள் பரவுவது அதிகமாக இருக்கும். 30 நாட்கள் மது அருந்தாமல் இருக்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |