கண் பார்வையை கூர்மையாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்
தற்காலத்தில் பலரும் தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வேலையை தான் செய்கின்றார்கள்.இதன் காரணமாக இளவயதிலேயே பார்வை குறைப்பாடு ஏற்படுகின்றது.
மேலும் மன அழுத்தம், நீண்ட நேரம் போன் பார்ப்பது, சரியான தூக்கமின்மை, வயதாவது , ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் வேறு சில காரணங்களாலும் பார்வை குறைப்பாடு மற்றும் கண் தொடர்பான பிரச்சிகைள் ஏற்பட வாய்ப்பு காணப்படுன்றது.
அந்த வகையில் பிரதானமாக ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் நமது கண் பார்வை பலவீனமாகிறது. கண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளவும் கண்பார்வையை கூர்மையாக்கவும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன்
உப்பு நீரில் வாழும் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகளவில் காணப்படுகின்றது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது. தினசரி உணவில் மீனை சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.
உலர் பழங்கள்
கண் பார்வையை கூர்மையாக்க தினசரி உணவில் உலர் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதில் வைட்டமின் ஈ சத்துகள் அதிகமுள்ளதால், வயதாவதால் வரக்கூடிய கண் பாதிப்புகளை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.பிரேசில் நட்ஸ், முந்திரி, வேர்க்கடலை, பருப்பு வகைகள் ஆகியவற்றை சிறிதளவேனும் தினமும் சாப்பிடுவது நல்லது.
நட்ஸ்
உலர் பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் பல்வேறு வகையான நட்ஸ்கள் நம் பார்வையை மேம்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆகையால் சியா விதைகள், ஆளி விதைகள், சணல் விதைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை தினசரி சாப்பிட வேண்டியது இவசியம்.
பச்சை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் கண்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இவற்றில் லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் கண்களுக்கு உகந்த வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றது. கண் பார்வையை எப்போதும் கூர்மையாக வைத்துக்கொள்ள பச்சை காய்கறிகள் இன்றியமையாதது.
கேரட்
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கேரட்டில் செறிந்து காணப்படுகின்றது. இவை கண்ணில் உள்ள புரதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது. கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |