Fatty liver பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்
தற்காலத்தில் துரித உணவுகளை உட்கொள்ளும் அளவு அதிகரித்தமை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் ஆகியன காரணமாக கல்லீரல் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் அதிகமானோர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமற்றி கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்து கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver)ஏற்படுகின்றது.
மது அருந்தும் பழக்கம் இல்லாத அல்லது எப்போதாவது சிறிதளவு மது அருந்தும் நபர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
அதனை கட்டுப்படுத்த எந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரல் ஆகும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும்.
கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும்.
இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல் உதவுகிறது.
கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி பார்கக்லாம்.
எலுமிச்சை
எலுமிச்சை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதுடன் கல்லீரல் சுத்தமாகும்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் அதிகளவில் நார்ச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள் A, C, மற்றும் E மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களின் ஆகியன நிறைந்த காணப்படுகின்றது.தினமும் காலை வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிவர கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் வேதிப்பொருளான பெக்டினின் செரிமான அமைப்பில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை சுத்திகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவர கல்லீரலில் கொழுப்பு படிவது தடுக்கப்பட்டு கல்லீரல் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட் அல்லது கேரட்
பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் C பைல் சாற்றை தூண்டி, நொதிய செயல்பாட்டை அதிகரிப்பதில் பெரிதும் உதவுகின்றது. அதேபோல கேரட்டில் அதிக அளவு வைட்டமின் A செறிந்து காணப்படுவதால் கல்லீரல் நோய் ஏற்படுவதை தடுத்து அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |