சாணக்கிய நீதி: இந்த 5 பழக்கங்களை விட்டுடுங்க! இல்லனா வெற்றி கிட்டவே நெருங்காதாம்
பண்டைய இந்தியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்ய சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.

இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் மனிதன் வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய 5 பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள்
சோம்பல்

வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்றால் முதலில் சோம்பலை அடியோடு ஒழிக்க வேண்டும் என சாணக்கிய நீதி வலியுறுத்துகின்றது.
சாணக்கியர் குறிப்பிடுகையில், சோம்பல் என்பது பெரிய வியாதி இந்த வியாதி இருந்தால் வாழ்வில் வெற்றி என்பதை ஒரு போதும் அனுபவிக்க முடியாது.
சோம்பலுக்கு ஒரு நானை கொடுத்துவிட்டால், அது அடுத்த நாளையும் உங்களின் அனுமதி இல்லாமலேயே எடுத்துக்அகொள்ளும். இது வெற்றிக்க மிகப்பெரும் தமையாக இருக்கும்.
பாதுகாப்பின்மை

ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னர் இது சரியா தவறா என்று ஆராய்வதில் தவறில்லை. ஆனால் அதனை தொடர்ச்சியாக ஆராய்ந்துக்கொண்டே இருப்பது தான் வெற்றியை கிட்டவே நெருங்க விடாமல் தடுக்கின்றது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
அதாவது எந்த செயலிலும் பாதுகாப்பு இல்லாமது போல் உணர்வது அந்த செயலை முழுமையா செய்யவிடாமல் தடுக்கின்றது. இந்த பயம் புதிய வாய்ப்புகளை ஏற்பதில் தடையை ஏற்படுத்துகின்றது. இந்த குணம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றி என்பது எட்டா கனியாக மட்டுமே இருக்கும்.
பேராசை

வாழ்க்கையில் ஆசைப்படுவது தவறல்ல. நமது தகுதிக்கும், தேவைக்கும் மீறிய ஆசை நிச்சயம் அழிவை கொடுக்கும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
பேராசை மற்றவர்களின் சொத்துக்களையும் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்கும். அதனால் நீங்கள் சரியான முறையில் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இழந்துவிடுவீர்கள்.
அதனால் வாழ்வில் உண்மையாக வெற்றியின் சுவையை அறியவே முடியாமல் போய்விடும் என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
கோபம்

கோபம் மிகவும் ஆபத்தான ஒரு உணர்ச்சியாகும். அதனை கோபத்துடன் எழுபவன் நிச்சயம் ஏதாவது ஒன்றை இழந்துதான் அமருகின்றார். எனவே தான் கோபம் வாழ்வில் வெற்றியடைவதற்கு மிகப்பெரும் தடையாக இருக்கின்றது என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
நாம் எடுக்கும் எந்தவொரு முடிவுவையும் மிகுந்த நிதானத்துடன் செயல்படுத்துவது அவசியமாகும். கோபத்துடன் செய்யப்படும் எந்த செயலும் தவறானதாகவே முடியும்.
இது சில உறவுகளின் பிரிவுக்கும் வழிவகுக்கும். எனவே வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்று ஆசையிருந்தால், முதலில் கோபத்தை விட்டுவிட வேண்டியது அவசியம்.
ஆணவம்

தான் தான் பெரியவன் என்ற மமதை இருக்கும் வரையில் வெற்றி கிட்டவே நெருங்காது. பிறரிடம் ஏதேனும் புதிய விஷயங்களை கற்று கொள்வதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது.
யாரும் உலகில் பெரியவர்களும் இல்லை, சிறியவர்களும் இல்லை என்ற எண்ணம் வலுவாக இருக்கும் மனிதர்கள் தான் வாழ்வில் முன்னேற்ற பாதையில் இருப்பார்கள் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
எனவே வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் இந்த 5 குணங்களை முற்றிலும் தவிர்க வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |