சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா?
சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்தது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நமது வாழ்ககையில் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள கூடாது எனறால், குறிப்பிட்ட சில குணங்களை கொண்டவர்களுடன் பழப்பம் வைத்துக்கொள்வதையும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
முகஸ்துதி செய்பவர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில், எந்தவித உழைப்புமின்றி மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி பணம் சம்பாதிக்க நினைக்கும் குணம் கொண்டவர்களுடன் ஒருபோதும் பழக்கம் வைத்துக்கொள்ள கூடாது.
இவர்களுக்கு தரியாதை கொடுப்பதால் அவரை்கள் உங்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க வாய்ப்பிருக்கின்றது. இந்த குணம் கொண்டவர்களிடமிருந்து விலகியிருப்பதே சிறப்பு.
கூட்டாக சதி செய்பவர்கள்
சாணக்கியர் கருத்துப்படி தனிமையில் நிற்க தைரியம் இல்லாதவர்களுக்கு ஒருபோதும் மரியாதை செலுத்த கூடாது.
இவர்கள் எப்போதும் குழுவாக சேர்ந்து மற்றவர்களின் பிழைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் மற்றவர்களுக்கு எதிராக சதி செய்வார்கள்.
ஆனால் தங்களின் பிழைகள் பற்றி ஒருபோதும் சிந்திக்கவே முடியாது. இவர்களுக்கு மரியாதை கொடுப்பதால் எவ்வித பயனும் இல்லை.
இத்தகையவர்களின் பழக்கம் உங்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றிவிடும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க இவர்களை தவிர்ப்பது நல்லது.
அனைவரிடமும் நண்பராக இருப்பவர்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் அனைவரிடம் நண்பனாக இருப்பவர்கள் உண்மையில் யாருக்கும் நண்பனாக இருக்க மாட்டார்கள் இத்தகையவர்களிடம் உண்மையை எதிர்ப்பார்க்க முடியாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
இவர்கள் உங்கள் முன்னால் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவார்கள், நீங்கள் இல்லாத போது உங்களைப் பற்றியும் மோசமாகப் பேசுவார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் இவர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்வதும் ஆபத்தானது.
பாவ செயல்களை செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி விலங்குகள், பறவைகள், குழந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான பாவச்செயல்களை செய்பவர்கள் இறைவனின் மன்னிப்புக்கு தகுதியற்றவர்கள்.
இந்த குணம் கொண்டவர்களை மதிப்பது சமூகத்திற்கும் மனிதகுலத்திற்கும் பெரும் தீமையை உண்டாக்கும்.
பெண்களை அவமதிப்பவர்கள்
பெண்களை அவமானப்படுத்தில் அதில் மகிழ்ச்சி காணும் சில மோசமான குணம் கொண்டவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் தங்களை பெரியவர்களாக உணரலாம் ஆனால் இவர்களை விட கீழ்தரமானவர்கள் கிடையாது என்கின்றார் சாணக்கியர்.
இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது, சமூகத்தில் உங்களின் மரியாதைக்கும் பங்கம் விளைவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |