கரப்பான் பூச்சி தொல்லை ரொம்ப அதிகமாக இருக்கின்றதா? இதை மட்டும் செய்திடுங்க
வீடுகளில் சுற்றித்திரியும் கரப்பான் பூச்சியை எவ்வாறு ஒழிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கரப்பான் பூச்சி
நமது வீடுகளில் பெரும்பாலாலும் கரப்பான் பூச்சியின் அட்டகாசம் அதிகமாகவே இருக்கும். சமையலறை, சாப்பாடு வைக்கும் பாத்திரங்கள், பாத்திரம் கழுவும் இடம் என அனைத்து இடங்களிலும் தனது ஆதிக்கத்கதினை கொண்டுள்ளது.
இவ்வாறு எதிர்பாராமல் தோன்றும் கரப்பான் பூச்சிகள் பெரும் ஆபத்தினை விளைவிக்கின்றது. அதாவது கரப்பான் பூச்சிகள் பல தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும் இருக்கின்றது.
வீட்டு சமையலறையில் ஏதோவொரு பொருட்களை எடுத்தாலும், அதற்கு பின்னால் ஒட்டிக்கொண்டும், மறைந்து கொண்டும் இருக்கும். இவை சில தருணங்களில் பறந்து வந்து நமது முகத்திலும் வந்துவிடுகின்றது.

ஆதலால் குழந்தைகள் கரப்பான் பூச்சியினைக் கண்டு பயங்கரமாக அலறுகின்றனர். இவை பெரும்பாலும் கழிவறை, குளியலறை, சமையல் துலக்கும் தொட்டி இவற்றில் தான் அதிகமாக காணப்படுகின்றது.
இவை எளிதில் நோயைப் பரப்பப்கூடியதாக இருப்பதால் பலருக்கும் இதனை கண்டால் அருவறுப்பாகவே இருக்கின்றது. உலகில் 1300 வகையான கரப்பான் பூச்சி வகைகள் காணப்பட்டாலும் மனிதர்களை வாழ்வாதாரத்திற்கு 30 வகையான கரப்பான் பூச்சியே சார்ந்துள்ளது.
பாதிப்பு என்ன?
கரப்பான் பூச்சி சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், சுவாச பிரச்சனையையும், மலேரியா, டைபாய்டு போன்ற நோயையும் ஏற்படுத்துகின்றது.
கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்ற இந்த அசுத்தமான உணவுகள் அல்லது பானங்களை உட்கொள்ளும்போது மற்றும் பாத்திரங்களில் உணவு உட்கொள்ளும் போது இந்த கிருமி உடலில் புகுந்து டைபாய்டு, காலரா போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.
கழிவறைகளில் காணப்படும் சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவை எளிதாக வீட்டிற்குள் கொண்டுவந்துவிடும். மேலும் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் தான் இவை செழித்து பெருகுகின்றது.

தடுக்க வழி என்ன?
குப்பைகளை வீட்டில் அதிகமாக சேர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் மிகவும் முக்கியம்.
சுவர் மற்றும் குழாய்களில் இருக்கும் சிறு சிறு துவாரங்களை அடைத்துவிட வேண்டும். அட்டைப்பெட்டி, புத்தகம் இவற்றினை சுத்தமாக அடுக்கி வைக்கவும்.
அவ்வப்போது கரப்பான் பூச்சியை அகற்றும் மருந்தினை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் வந்த பின்பு கெமிக்கல் கலந்த மருந்தை பயன்படுத்தாமல் வருவதற்கு முன்பு பாதுகாக்க இருக்கவும்..

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |